`சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித் – காஜல் அகர்வால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் `தல 57′. நாளுக்கு நாள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாய் தயாரித்து வரும் `தல 57′ படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படாத நிலையில் படத்தின் பெயர் குறித்து வதந்திகள் பரவி வருகிறது. இந்நிலையில், `தல 57′ படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று நாளை வெளியிடப்படும் என்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில், இப்படத்தை 3 பாகங்களாக எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் பரவி வருகிறது. இப்படத்தில் அஜித், ஜேம்ஸ் பாண்ட் போல அரசு உளவாளியாக நடித்து வருவதாகவும், 2வது, 3வது பாகங்களுக்குமான கதையையும் ஏற்கனவே உருவாக்கிவிட்டதாவும் கூறப்படுகிறது.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அக்‌ஷரா ஹாசன், பாலிவுட் பிரபலம் விவேக் ஓபராய் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைத்து வருகிறார்.

ரம்ஜான் வெளியீடாக ஜுன் 23-ம் தேதி `தல 57′ படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.