Tamil Cinema News | சினிமா செய்திகள்
கழிவறை தண்ணீரில் டீ தயாரித்த ரயில்வே ஊழியர்
ஓடும் ரயிலில் கழிவறை நீரை பயன்படுத்தி டீ தயாரித்த டீ கான்ட்ராக்டருக்கு 1 லட்சம் அபதாரம் விதிக்கப்பட்டுள்ளது.
ஓடும் ரயிலில் கழிவறை நீரை பயன் படுத்தி டீ தயாரித்து மக்களுக்கு டீ பரிமாறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, பொதுவாக இந்திய ரயிலில் ரயில்வே அனுமதியுடன் டீ மற்றும் சில உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவது வழக்கம், இதில் சில டீ விர்ப்பனையாளர்கள் செய்த முகம் சுளிக்கும் செயலால் இணையத்தில் பரவி வரும் வீடியோவை பார்த்தால் பார்வையாளருக்கு குமட்டலே வரும் அளவிற்கு கொடூரமாக இருக்கிறது.
இந்த வீடியோ சென்னை சென்ட்ரல் ஐதராபாத் செல்லும் சாரம் இனர் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளால் எடுக்கப்பட்டு சமூக வலைதளத்தில் பரவி வருகிறது இதில் நீல நிற சட்டை போட்டுக்கொண்ட ரயில் ஊழியர் ஒருவர் கழிவறை தண்ணியை டீ தயாரிப்பதற்கு பயன்படுத்தியுள்ளார்.
இந்த வீடியோவை எடுத்த நபர் இது கழிவறை நீர் தான் என கழிவறைக்கு சென்று வீடியோ எடுத்து உறுதிபடுத்தியுள்ளார், இணையதளத்தில் பரவும் இந்த வீடியோவை பார்த்து விட்டு இனி ரயிலில் உணவு அல்லது டீ போற்றவற்றை வாங்குவார்களா என கேள்வி குறியாக உள்ளது.? இது கட்டாயம் பொதுமக்களுக்கு சேரவேண்டிய பதிவு முடிந்தால் பகிருங்கள்.
