மைனா இந்தப்பெயரை கேட்டதும் நம் நினைவுக்கு வருவது அண்மைகால சம்பவங்கள்தான். சரவணன் மீனாட்சி தொடர் நடிகை நந்தினியின் கணவர் கார்த்திகேயன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார்.

இவரின் தற்கொலைக்கு மைனா நந்தினி மீது குற்றம் சுமத்தப்பட்டது. நடிகை நந்தினி மீது பல குற்றங்கள் தொடர்ந்து கூறி வரும் நிலையில் கார்த்திகேயன் முன்னாள் காதலி சாவுக்கு இவர்தான் காரணம் என்ற தகவலும் பரவியது.

நடிகை நந்தினி இப்படி பட்டவரா? இரண்டு பேரின் தற்கொலைக்கு காரணமாக இருந்திருப்பார் என்ற கேள்வியும் சந்தேகமும் பலருக்கு எழுந்துள்ளது. இதற்கிடையில், நந்தினி தனது கணவர் மரணம் குறித்த தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். தமக்கு எது நடந்தாலும் அதற்கு தனது கணவர் கார்த்திகேயன் பொறுப்பல்ல. நான் அவரின் விருப்பம் இல்லாமல்  அவரை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.