பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகும் முக்கிய பிரபலம்.. விஜய் டிவி டிஆர்பி-க்கு சிக்கல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அதிக டிஆர்பியை பெரும் சீரியல்கள் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா தான். ஆனால் தற்போது டிஆர்பி அடிவாங்கும் அளவிற்கு பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து முக்கிய பிரபலம் ஒருவர் விலக உள்ளார்.

கூட்டுக் குடும்பம், அண்ணன் தம்பி பிணைப்பு போன்ற விஷயங்களை உள்ளடக்கி ஒளிபரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இத்தொடரை அதிக ரசிகர்கள் விரும்பி பார்த்து வருகின்றனர். அதுமட்டுமின்றி தற்போது விறுவிறுப்பான கதை களத்துடன் இத்தொடர் சென்று கொண்டிருக்கிறது.

Also Read : விஜய் டிவியை தூக்கி எறிந்த சீரியல் நடிகை.. ஜீ தமிழும் கைவிட்ட பரிதாபம்

இதில் மூர்த்தியின் இரண்டாவது தம்பியான கதிர் தற்போது புதிதாக ஹோட்டல் நடத்தி வருகிறார். இதில் அவருக்கு உறுதுணையாக அவரது மனைவி முல்லை இருக்கிறார். அதாவது அந்த முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் காவியா அறிவுமணி. இவர் இதற்கு முன்னதாக பாரதி கண்ணம்மா தொடரில் நடித்திருந்தார்.

அந்த சமயத்தில் முதலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே சித்ரா தற்கொலை செய்து கொண்டதால் அந்த கதாபாத்திரத்தில் காவியா நடித்து வருகிறார். தற்போது காவியாவும் இத்தொடரில் இருந்து விலகப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Also Read : சுட்டு போட்டாலும் திருந்தாத பாக்யா.. இன்னும் அந்த மானங்கெட்ட புருஷன் தேவையா?

இந்நிலையில் காவியா அறிவுமணி இன்று தனது சமூக வலைதள பக்கத்தில் ஆர்க்கிடெக்ட் முடிந்துவிட்டு பட்டம் வாங்கிய புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இதனால் மேற்படிப்புக்காக இத்தொடரில் இருந்து விலக உள்ளாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது.

மேலும் வெள்ளித்திரையிலும் ஒரு சில பட வாய்ப்புகள் காவியாவை நாடி வருவதால் தற்போது சீரியலில் இருந்து விலக்குவதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஒரே கதாபாத்திரத்திற்கு தொடர்ந்து இரண்டு முறை பிரபலங்கள் மாற்றப்படுவதால் இத்தொடரின் டிஆர்பி பாதிக்கும் என கூறப்படுகிறது.

Also Read : இரு மகள்களுக்கும் வைத்த கெடு.. உண்மையை கக்கிய கண்ணம்மா

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்