1. அலாரம் இல்லாமலேயே எந்திரிச்சிடுவோம் மாமியார் வீட்ல, அடிக்கிற அலாரத்தை அடிச்சி நிப்பாட்டிட்டு அடிச்சு போட்ட மாதிரி தூங்குவோம் அம்மா வீட்ல. .

2. சாப்பிடுறோமோ இல்லையோ கரெக்ட் டயத்துக்கு சமைச்சிடுவோம் மாமியார் வீட்ல,

சமைச்ச சாப்பாடு காத்துக்கிட்டுருக்கும் நமக்காக அம்மா வீட்ல. .

3. மொபைல் வச்ச இடமே மறந்து போகும் மாமியார் வீட்ல, கையை விட்டு மொபைல் கீழே இறங்காது அம்மா வீட்ல. .

அதிகம் படித்தவை:  சென்னை-28 இரண்டாம் பாகத்தை உறுதிப்படுத்திய வெங்கட் பிரபு!

4. ஓடிக்கிட்டிருக்கிற டிவியை வெறுமனே பார்ப்போம் மாமியார் வீட்ல, ரிமோட் நம்ம கையில் பாடாய்ப்படும் அம்மா வீட்ல. .

5. சுடிதார் துப்பட்டா ரெண்டு தோளை விட்டு நகராது மாமியார் வீட்ல, துப்பட்டா சர்ட் ஹேங்கர்ல தொங்கிட்டு இருக்கும் அம்மா வீட்ல. .

அதிகம் படித்தவை:  குத்தாட்ட பாடல் ஷூட்டிங்: டான்சர் படும் பாட்டை பார்த்திருக்கிறீர்களா ?

6. சாப்டலனா.,.அடியே சாப்ட்டுட்டு டிவிய பாரு..ம்ம்ம் இந்தா ஒரு வாய் என்றப்படி ஊட்டிவிடும் அம்மா. சாப்டியாமா… சரிமா .. அந்த தைலத்த கொஞ்சம் எடேன்மா மூட்டுவலி உயிர்போகுது..அப்டியே கொஞ்சம் தடவி விட்ருமா..இது மாமியார் வீட்ல

திருமணமான பெண்களுக்கு சமர்ப்பணம்.