லைக்கா தலையில் மகிழ் திருமேனி போட்ட குண்டு.. சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி போடும் கேட்

விடாமுயற்சி பல போராட்டங்களுக்குப் பின் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை மற்றும் ஹைதராபாத்தில் கிளைமாக்ஸ் காட்சிகள் சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அக்டோபர் 31 தீபாவளி நாளன்று படம் ரிலீஸ் ஆகிறது. நெட்லிக்ஸ் ஓடிடி தளம் இதை வாங்கி உள்ளது.

ஏற்கனவே இந்த படத்தை கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக ஜவ்வு மிட்டாய் போல் இழுத்து வருகிறார்கள். இந்த படம் சூட்டிங் ஆரம்பித்ததில் இருந்து லைக்காவிற்கு பண பிரச்சனை தான். ஒரே நேரத்தில் பல பெரிய படங்களை கமிட் செய்த லைக்காவிற்கு இப்பொழுது சற்று நிதி நெருக்கடி.

அஜர்பைஜானில் நடைபெற்ற சூட்டிங்கில் மட்டும் இந்த படம் ஒரு நாளில் கிட்டத்தட்ட 30 லட்சத்திற்கு மேல் செலவு வைத்துள்ளது. இதனால் ஆடிப் போன தயாரிப்பாளர் பணம் வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என சூட்டிங்கை நிறுத்திவிட்டார்.

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி போடும் கேட்

இப்பொழுது ஒரு வழியாக விடாமுயற்சி படம் கிளைமாக்ஸ் கட்டங்களை எட்டி உள்ளது. ஆனால் மகிழ் திருமேனி மீண்டும் தயாரிப்பாளர் தலையில் ஒரு குண்டை தூக்கி போட்டு உள்ளார். பணம் பற்றாக்குறையால் தவித்து வந்த லைக்காவிற்கு இது மேலும் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது

இந்த படத்திற்கான ப்ரோமோ சூட்டிங் எடுக்க வேண்டும், அதற்கு மீண்டும் அஜர்பைஜான் செல்ல வேண்டும் என கேட்டு கேட்டிருக்கிறார். அப்படியே படத்திற்கான பேட்ச் ஒர்க்களையும் பார்த்து விடலாம் என்று திட்டம் போட்டு இருக்கிறார். லைக்கா ஒத்துழைப்பு கொடுத்தாலும் அஜித் மீண்டும் அங்கே செல்வாரா என்பது சந்தேகம் தான்.

Next Story

- Advertisement -