Tamil Cinema News | சினிமா செய்திகள்
இரும்புத்திரை தெலுங்கு வெர்ஷன் பார்த்துவிட்டு, இயக்குனரை பாராட்டிய டோலிவுட் ஹீரோ !

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சமந்தா, அர்ஜுன், விஷால் நடித்து சூப்பர் ஹிட் ஆன படம். 40 நாட்களுக்கு மேல் இன்னமும் ரசிகர்களின் ஆதரவுடன் திரையில் வெற்றிகரமாக ஓடிகொன்றிருக்கிறது.
அபிமன்யுடு
இப்படத்தினை தெலுங்கில் டப் செய்து ஜூன் 1 வெளியிட்டிருந்தார் விஷால். அங்கும் படம் சூப்பர் ஹிட். இந்நிலையில் இப்படத்தினை பார்த்துவிட்டு தான் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இயக்குனர் மற்றும் விஷாலை பாராட்டியுள்ளார். அவர் தன த்விட்டேர் பக்கத்தில் போட்டிருந்த பதிவு ..
அபிமன்யுடு திரைப்படம், என்னை இம்ப்ரெஸ் செய்துவிட்டது. இயக்குனர் மித்ரனின் நோக்கம் மற்றும் திறமை,படத்தில் அருமையாக வெளிப்பட்டுள்ளது. நன்றாக ஆராய்ந்து வேகமான திரைக்கதையை உடைய படம். விஷால் மற்றும் படக்குழுவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று அதில் கூறியிருந்தார்.
இயக்குனரும் மகேஷ் பாபுவிற்கு தன நன்றிகளை தெரிவித்தார்.
‘இப்படி ஒரு காலை பொழுது , தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவிடம் இருந்து பாராட்டு கிடைக்கும் என கனவிலும் நினைக்கவில்லை. நீங்கள் இவ்வாறு கூறியதற்கு என் நன்றிகள் சார்’ என ரீட்வீட் செய்துள்ளார் இயக்குனர் மித்ரன்.
