ஆகஸ்ட் 9 ஆன இன்று தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோ மகேஷ் பாபு தன் 42 வயதில் நுழைகிறார். இந்நிலையில் பரத் எனும் நான் வெற்றியை தொடர்ந்து தன் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தினை வம்சி படிப்பள்ளி இயக்குகிறார். ( இது அவரின் சினிமா கேரியரில் 25 வது படம். வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ், விஜயந்தி மூவிஸ் மற்றும் பி வி பி சினிமாஸ் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். பூஜா ஹெகிடே மற்றும் அலறி நரேஷ் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.

சில தினங்களுக்கு முன் ஹீரோ மற்றும் இயக்குனரின் மகள்கள் சித்தாரா மற்றும் ஆதியா படத்தின் லோகோ வை வெளியிட்டனர் .

SSMB 25

இப்படத்தின் ஷூட்டிங் இன்று ஆகஸ்ட் 9 தொடங்குகின்றது. இந்நிலையில் முன்பே அறிவித்தது போலவே படத்தின் தலைப்பு மற்றும் முதல் லுக் போஸ்டரை ஹீரோ தன் த்விட்டேர் பக்கத்தில் நள்ளிரவு வெளியிட்டார்.

ரிஷி என்ற கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு நடிப்பதாகவும், அவற்றின் வாழ்க்கையை இப்படம் படம் பிடிக்கும் என்றும் , அதற்க்கு மஹரிஷி எனவும் பெயர் வைத்துள்ளனர்.

#Riahi #Maharishi

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on