செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

சிங்கப்பெண்ணில் அன்புக்கு கட்டம் கட்டிய மகேஷ்.. முடிவுக்கு வரும் ஆனந்தி-அழகன் காதல்

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. நேற்றைய எபிசோடில் ஒரு பக்கம் மகேஷ், அன்பு தான் அழகனாக இருக்கக் கூடாது என்ற முடிவில் முத்துவை அழைத்து அன்புவிடம் லெட்டர் எழுதி வாங்கி வர சொல்லி இருந்தான்.

அதே நேரத்தில் அன்புவின் அம்மா மற்றும் தங்கை யாழினிக்கு அன்பு பங்களாதேஷுக்கு போவது தெரிந்து விட்டது. அம்மா மற்றும் யாழினி இருவரும் அன்புவிடம் இது பற்றி கேட்கிறார்கள். அவர்கள் எவ்வளவு கெஞ்சியும் அன்பு தன்னுடைய முடிவை மாற்றிக் கொள்வதாய் இல்லை.

இதை தொடர்ந்து வீட்டிற்கு வரும் முத்துவிடம் அன்புவின் அம்மா நடந்ததை எல்லாம் சொல்கிறார். முத்துவுக்கும் இந்த விஷயம் கோவம் வர அன்புவிடம் நான் பேசிக் கொள்கிறேன் என மொட்டை மாடியில் போகிறான்.

முடிவுக்கு வரும் ஆனந்தி-அழகன் காதல்

அங்கு அன்பு விடம் மகேஷ் சார் கம்பெனியில் என்ன மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பது பற்றி உன்னிடம் கடிதம் எழுதி வாங்கி வர சொன்னார் என்று சொல்கிறான். அன்பு கடிதத்தை எழுதி முடிக்க திடீரென முத்துவுக்கு ஒரு யோசனை வருகிறது.

அன்புவின் கையெழுத்தை பார்த்து விட்டால் ஆனந்திக்கு அன்பு தான் அழகன் என தெரிந்துவிடும் என நினைக்கிறான். உடனே ஆனந்தியிடம் இந்த கடிதத்தை வாங்கி படித்துப் பார் என்று சொல்கிறான். பதறிப் போன அன்பு அந்த கடிதத்தை வேகமாக முத்துவின் கையில் இருந்து புடுங்கி விடுகிறான்.

இது ஆனந்திக்கு ரொம்பவும் கஷ்டமாக ஆகிவிடுகிறது. நீங்க என்கிட்ட எதையோ மறைக்கிறீங்க அன்பு என்று சொல்லிவிட்டு ரூமுக்கு சென்று விடுகிறாள். ஆனந்தியிடம் தப்பித்தாலும் இந்த கையெழுத்தை பார்த்து மகேஷ் கண்டிப்பாக உன்னை கண்டுபிடித்து விடுவார் என முத்து மனதில் நினைக்கிறான்.

முத்துவை பொருத்த வரைக்கும் மகேஷ் அன்பு தான் அழகன் என தெரிந்து கொண்டால் இந்த காதலுக்கு உதவி செய்வான் என நினைக்கிறான். உண்மையிலேயே சீரியல் ரசிகர்களுக்கும் அப்படி ஒரு எண்ணம் தான் இருந்தது.

எல்லோரும் எதிர்பார்த்தபடி இரண்டு கையெழுத்தையும் வைத்து அன்பு தான் அழகன் என மகேஷ் கண்டுபிடித்து விடுகிறான். ரொம்பவும் கோபத்தில் மிருகம் போல் கத்துகிறான். இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஆனந்தி அன்புவிடம் பங்களாதேஷிற்கு போகக்கூடாது என பேசுகிறாள்.

அதற்கு அன்பு அவளிடம் கோபமாக என்னுடைய முடிவை யாராலும் மாற்ற முடியாது என்று சொல்கிறான். கம்பெனிக்கு வந்த ஆனந்தி மகேஷிடம் அன்பு பங்களாதேஷிற்கு போவதை பற்றி சொல்லி, அவனை தடுத்து நிறுத்துமாறு கேட்கிறாள்.

அதற்கு மகேஷ் நீ இனி அன்பு வீட்டில் இருக்கக் கூடாது, நான் உன்னை இன்று சாயந்திரமே புதிய ஹாஸ்டல் ஒன்றில் சேர்த்து விடுகிறேன் என கோபமாக சொல்கிறான். அன்புவை பற்றி புரிந்து கொண்ட மகேஷ் அன்பு தான் அழகன் என தெரிந்தது இந்த காதலை விட்டுக் கொடுத்து விடுவான் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இப்படி அன்புவை ஒழித்துக் கட்ட திட்டம் போடுவான் என்பது யாருமே தனித்திருக்க முடியாது. அந்த நூல் இந்த காதலில் இருந்து விலகி இருக்க பங்களாதேஷ் சென்று விட்டால் இனி அழகன் என்ற ஒரு கேரக்டரை ஆனந்தியால் கண்டுபிடிக்கவே முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

- Advertisement -

Trending News