மகேஷ் சொன்ன ஒரு வார்த்தை, நொறுங்கி போன அன்பு.. சுக்கு நூறாய் உடைந்த அழகன்-ஆனந்தி காதல்

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் ரசிகர்கள் ரொம்ப நாளாக எதிர்பார்த்த விஷயம் இன்றைய எபிசோடில் நடக்க இருக்கிறது. தன் அப்பா மீது விழுந்த பழியை துடைப்பதற்காக ஆனந்தி துணிச்சலாக காட்டுக்குள் கொள்ளையர்களை தேடி போனாள்.

சரியாக கொள்ளையர்களை கண்டுபிடித்து அவர்களுடன் சண்டையிட்டு அந்த நகை மூட்டையையும் எடுத்துக் கொண்டே வெளியே வந்தால். ஆனால் அந்த நேரத்தில் காட்டுக்குள் வந்த சுயம்புலிங்கம் ஆனந்தியை கட்டையால் தலையில் அடித்து விட்டான்.

அப்போது மயங்கி இருந்த ஆனந்தியை உயிருடன் மண்ணுக்குள் புதைத்து விட்டார்கள். கொள்ளையர்கள் இடமிருந்து தப்பித்த ஆனந்தியின் தங்கச்சி அன்பு மற்றும் மகேஷிடம் ஆனந்தியை காட்டுக்குள் தூக்கிக் கொண்டு போய் விட்டார்கள் என தகவலை சொல்கிறாள்.

கதறி அழுத அன்பு, மகேஷ்

மகேஷ் மற்றும் அன்பு இருவரும் காட்டுக்குள் ஆனந்தியை தேடி அலைகிறார்கள். ஒரு கட்டத்தில் ஆனந்தியை இங்கே உயிரோடு புதைத்து விட்டார்கள் என்பதை அன்பு கண்டுபிடிக்கிறான். மகேஷ் மற்றும் அன்பு இருவருமே பைத்தியம் பிடித்தது போல் ஆனந்தியை தேடுகிறார்கள்.

எந்த பக்கமும் தேடியும் எந்த தடயமும் கிடைக்காததால் இருவருமே கதறி அழுவது போல் நேற்றைய எபிசோடு முடிந்திருந்தது. இன்றைய ப்ரோமோ யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு வெளியாகி இருக்கிறது. ஆனந்தியை தேடி அலையும் அன்பு ஒரு இடத்தில் கீழே விழுகிறான்.

அப்போது அந்த மண்ணுக்குள் இருக்கும் ஆனந்தியின் இதயத்துடிப்பு அன்புக்கு கேட்கிறது. அந்த நேரத்தில் ஆனந்தி அழகா என்று சொல்வது போல் குரல் கேட்கிறது. அந்த குரலை கேட்டதும் அன்பு பதறிப் போகிறான். உண்மையிலேயே அன்புவின் நடிப்பு பார்ப்பதற்கு ரொம்ப மெய்சிலிர்க்க வைப்பதாக இருக்கிறது.

நொறுங்கிப் போன அன்பு

அன்பு அந்த இடத்தில் மண்ணை நீக்கி விட்டு ஆனந்தியை தேடிக் கொண்டிருக்கிறான். அதே இடத்திற்கு வரும் மகேஷ் அன்பு உடன் சேர்ந்து மண்ணைத் தோண்டி எடுக்கிறான். அங்கே உள்ளே மயக்கம் அடைந்து கிடக்கும் ஆனந்தியை அன்பு தூக்கி தோள் மீது போட்டு வெளியே வருகிறான்.

அப்போது மகேஷ் அழுதப்படியே நான் காதலிக்கும் பெண் இந்த ஆனந்தி தான் என அன்புவிடம் சொல்கிறான். இது அன்புவின் தலையில் இடியை இறக்கியது போல் அவனுக்கு அமைகிறது. மகேஷ் உருகி உருகி காதலிக்கும் பெண் ஆனந்தி தான் என தெரிந்ததும் அன்பு தன்னுடைய காதலை விட்டுக் கொடுத்து விடுவானா என்பது தான் இப்போது பெரிய கேள்வியாக இருக்கிறது.

சுக்கு நூறாய் உடைய போகும் அழகனின் காதல்

ரொம்ப நாளாக இழுத்துக் கொண்டு இருக்கும் இந்த முக்கோண காதல் கதையில் யாராவது ஒருவர் வாயை திறக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பாகவும் இருந்தது. அதை இப்போது மகேஷ் வாயை திறந்து சொல்வது போல் இயக்குனர் எடுத்திருக்கிறார்.

இருந்தாலும் மகேஷ் காக அன்பு தன்னுடைய காதலை விட்டுக் கொடுத்து விடுவானோ என்று சிங்க பெண்ணே சீரியல் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இருந்தாலும் எத்தனை பேர் தன்னிடம் வந்து காதலை சொன்னாலும் ஆனந்தி தன்னுடைய அழகனுக்காக காத்திருப்பாள் என்பதுதான் இப்போது சிங்க பெண்ணே சீரியல் ரசிகர்களுக்கு இருக்கும் பெரிய நம்பிக்கை.

எது எப்படியோ கொள்ளையர்களிடமிருந்து அன்பு அந்த நகை பையை பிடுங்கி விட்டான். இதை இப்போது கோவிலில் கொடுத்து ஆனந்தியின் குடும்ப மானத்தை காப்பாற்றி விடுவான். இதற்கு அடுத்து இவர்கள் எல்லோரும் சென்னைக்கு திரும்பும் பொழுது அன்பு மகேஷ்காக தன்னுடைய காதலை தியாகம் பண்ணுகிறானா, ஆனந்தி மகேஷின் காதலை ஏற்றுக் கொள்வாளா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Next Story

- Advertisement -