சிங்கப்பெண்ணில் மித்ரா தலையில் இடியை இறக்கிய மகேஷ்.. கருணாகரனால் கதி கலங்கி போன அன்பு, ஆனந்தி

சன் டிவியின் சின்ன பெண்ணே சீரியல் இந்த வாரம் சுவாரஸ்யமாக போய்க் கொண்டிருக்கிறது. இதுவரை சிங்க பெண்ணே என்ற பெயருக்கு அர்த்தம் இல்லாமல் சீரியலின் கதாநாயகி ஆனந்தி எதற்கெடுத்தாலும் அழுவது ரசிகர்களுக்கு கடுப்பை கிளப்பியது.

தற்போது தான் ஆனந்தி சிங்க பெண்ணாக மாறியிருக்கிறாள். அன்பையும், தன்னையும் குடோனுக்குள் வைத்து பூட்டியது மித்ரா மற்றும் கருணாகரனின் வேலையாகத்தான் இருக்கும் என்பதை ஓரளவுக்கு யூகித்த ஆனந்தி அவர்களுக்கு அதே மாதிரி தண்டனையை கொடுத்தாள்.

வச்சு செஞ்ச மகேஷ்

அன்பு, முத்து, சௌந்தர்யா மற்றும் கம்பெனி வாட்ச்மேன் உதவியுடன் மித்ரா மற்றும் கருணாகரனை லிப்டில் சிக்க வைத்தாள். காலையில் திட்டமிட்டபடி லிப்ட் திறக்கும் போது கம்பெனியில் இருக்கும் அத்தனை பேரும் நின்று கொண்டிருந்தார்கள்.

லிப்டுக்குள் மித்ரா மற்றும் கருணாகரன் இருந்தார்கள். அதிலும் கருணாகரன் சட்டை அணியாமல் இருந்தது ஆனந்தியின் திட்டத்திற்கு பெரிய உதவியாக இருந்தது. அன்பு மற்றும் ஆனந்தியை எவ்வளவு தவறாக பேசினார்கள் என்பதை குத்தி காட்டும் படி அன்பு மற்றும் ஆனந்தி பேசினார்கள்.

அந்த நேரத்தில் மகேஷும் கம்பெனிக்குள் வந்துவிட்டான். மித்ரா, கருணாகரன் மற்றும் அரவிந்திடம் அன்பு மற்றும் ஆனந்தி குடோனுக்குள் மாட்டிய போது எவ்வளவு மட்டமாக நீங்கள் பேசினீர்கள். இப்போது உங்களுக்கே இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

படிப்பு மற்றும் பதவி இருக்கிறது என்பதற்காக யோசிக்காமல் பேசுவது தவறு என செருப்பால் அடித்தது போல் அவர்களிடம் பேசினான். அது மட்டுமில்லாமல் கம்பெனி முடிந்த எல்லோரும் வீட்டுக்கு போகும் போது ஆனந்தி கருணாகரன் வண்டி ஓட்டிக்கொண்டு போகும் ரோட்டில் ஆணியை போட்டு விடுகிறாள்.

கருணாகரனை மிரள விட்ட ஆனந்தி

இதனால் கருணாகரனின் வண்டி பஞ்சர் ஆகிவிடுகிறது. அப்போது அங்கே வந்த ஆனந்தி உங்க ரெண்டு பேரையும் லிப்டுக்குள் மாட்ட வைத்தது நான் தான். எனக்கு வேலையில் எவ்வளவு டார்ச்சர் கொடுத்தீங்க, எல்லாம் நான் பொறுத்துக்கிட்டேன்.

ஆனா இப்போ எனக்கு கெட்ட பெயர் வரும் அளவுக்கு செஞ்ச விஷயத்தை நான் மன்னிக்கவே மாட்டேன். எங்க ரெண்டு பேரையும் குடோனுக்குள் சிக்க வைத்தது நீங்களா இருக்குமோ என்ற சந்தேகத்திற்கு தான் இந்த விஷயம் நடந்தது.

செவரக்கோட்டை திருவிழா

நீங்க தான் அப்படி செஞ்சீங்கன்னு உறுதி ஆச்சுன்னா இதைவிட பெரிய விஷயம் நடக்கும். ஜாக்கிரதையா இருந்துக்கோங்க என்று ஆனந்தி சிங்கம் போல் ஆக்ரோஷப்பட்ட பேசினாள். இங்கே இந்த பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஆனந்தியின் சொந்த ஊரான செவ்வரக்கோட்டையில் தீமிதி திருவிழா நடக்க இருக்கிறது.

தன்னுடைய அக்காவுக்கு சீக்கிரம் திருமணம் ஆக வேண்டுமென மூன்று வருடங்களுக்கு தீமிதிக்கிறேன் என ஆனந்தி ஏற்கனவே வேண்டுதல் வைத்திருக்கிறாள். இதனால் அவளுடைய அப்பா ஆனந்திக்கு போன் பண்ணி ஊருக்கு வரும்படி சொல்கிறார்.

இன்றைய ப்ரோமோ

அதே நேரத்தில் செவரக்கோட்டையில் ஆனந்திக்காக காத்திருக்கும் வில்லன் அவளை பழி வாங்கப் போவதாகவும் இனி அவள் இந்த ஊரில் இருந்து சென்னைக்கு திரும்ப முடியாது என்றும் சபதம் போடுகிறான். அது மட்டும் இல்லாமல் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மகேஷ் சித்ராவிடம் ஆனந்தி ஊரில் நடக்க இருக்கும் திருவிழாவுக்கு அவளுடைய அப்பா தனக்கு போன் பண்ணி ஊருக்கு வர சொல்லி இருப்பதாக சொல்கிறான்.

அது மட்டும் இல்லாமல் ஆனந்தியுடன் அவள் ஊருக்கு செல்லவும் ரெடியாகி கொண்டிருக்கிறான். ஊருக்கு போக லீவு கேட்டு கருணாகரனிடம் அன்பு மற்றும் ஆனந்தி வந்து நிற்கிறார்கள். ஆனால் கருணாகரன் ஆனந்திக்கு லீவு தர மறுக்கிறார். இன்றைய ப்ரோமோ இதோடு முடிந்திருக்கிறது.

கம்பெனியின் முதலாளியே ஆனந்தி ஊர் திருவிழாவுக்கு போக ரெடியான பிறகு ஆனந்திக்கு லீவு கிடைக்காமல் இருக்க போகிறது. இந்த திருவிழாவுக்கு ஆனந்தி மற்றும் மகேஷ் இருவரும் இணைந்து போகிறார்களா அல்லது அன்பும் கூட போகிறானா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

சிங்க பெண்ணில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள்

Next Story

- Advertisement -