மகேஷ் பாபு மனைவி யார்? என்ன பண்றாங்க தெரியுமா? அப்படியே ஷாக் ஆயிடுவீங்க!

நடிகை நம்ரதா ஷிரோத்கர், இப்படி சொன்னால் இவரை யாருக்கும் தெரியாது. ஆனால் மகேஷ் பாபுவின் மனைவி என்று சொன்னால், “அடடே இவரா.. இவரை தெரியாமல் எப்படி” என்று தோணும்.. இவர் 21 வயதில் மிஸ் இந்தியா பட்டம் பெற்றுள்ளார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

1993 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற நம்ரதா, தொடர்ந்து மாடலிங் துறையில் பல பட்டங்கள் பெற்றிருந்தார். மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் பங்கேற்ற நம்ரதாவுக்கு 6 ஆவது இடம் கிடைத்தது. பாலிவுட்டில் 1977 ஆம் ஆண்டு சத்ருகன் சின்ஹா நடித்த ஷிர்டி கே சாய் பாபா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி ஆனால் நம்ரதா.

நம்ரதா ஷிரோத்கர் அக்ஷய் குமார் மற்றும் சுனில் ஷெட்டியுடன் ‘புரப் கி லைலா அவுர் பஸ்சிம் கி சாய்லா’ படத்தின் மூலம் முன்னணி நடிகையாக அறிமுகமாகவிருந்தார், ஆனால் இந்தப் படம் வெளியாகவில்லை. 1998 ஆம் ஆண்டு ‘ஜப் பியார் கிசி சே ஹோதா ஹை’ படத்தின் மூலம் அறிமுகமானார் . தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருந்தாலும், எல்லாமே தோல்வியாக அமைந்தது.

6 ஆண்டுகள் சினிமா வாழ்க்கையில் அவர் நடித்த 16 படங்கள் ஃப்ளாப் ஆனது. இப்படிபட்ட சூழ்நிலையில் தான் 2000 ஆம் ஆண்டின்போது நடிகர் மகேஷ் பாபுவை சந்தித்தார். இந்த காதல் பறவைகள், முதல்முறையாக வம்சி பட செட்டில் தான் சந்தித்தார்கள். இருவரும் 5 ஆண்டுகள் டேட்டிங் செய்த பின்னர் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.

ஆனால் இந்த டேட்டிங் காலகட்டத்தில், இவர்கள் மீடியா கண்களிலிருந்து தப்பிக்க பெரும் பாடு பட்டனர். 2005 இல் திருமணம் செய்தனர். 2006 இல் மகன் கெளதம், 2012 இல் மகள் சிதாராவும் பிறந்தனர்.

திருமணத்திற்கு பிறகு, அவர் நடிப்பதை நிறுத்திவிட்டு, பிசினஸ்களை கவனித்து வருகிறார். மேலும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மனைவி என்ற அந்தஸ்துடன், குழந்தைகளையும் நல்லபடியாக வளர்த்து வருகிறார். மகேஷ் பாபுவை பொறுத்தவரையில் கடைசியாக குண்டூர் காரம் படத்தில் தென்பட்டார். தற்போது, பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -spot_img

Trending News