Vijay-Mahesh-Babu-Spider

மகேஷ் பாபு தற்போது தெலுங்கு மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் காலடி எடுத்து வைத்துவிட்டார். இவர் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் ஸ்பைடர் படம் பிரமாண்டமாக வரவுள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வர சமூக வலைத்தளமே அதிர்ந்தது, இந்நிலையில் இவர் தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்றில் பேட்டியளித்துள்ளார்.

இதில் தான் சென்னை பையன் அதனால் தமிழ் சினிமாவில் நடிப்பதில் மிகவும் சந்தோஷமாக உள்ளது.

மேலும், தமிழ் படங்கள் நிறைய பார்ப்பேன், விஜய் என்னுடைய நல்ல நண்பர், அவர் படங்களை விரும்பி பார்ப்பேன் என கூறியுள்ளார்.