Connect with us

Cinemapettai

mahesh-babu-a-child-foundation

India | இந்தியா

ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய அக்கட தேசத்து நடிகர் மகேஷ்பாபு

மகேஷ்பாபு கடந்த 4 ஆண்டுகளாக ஹீல் ஏ சைலட் பவுண்டேஷன் எனும் மையத்துடன் சேர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் ஓபன் ஹார்ட் சர்ஜரிக்கு உதவி செய்துள்ளார். இவரின் மனிதாபிமானம் மிக்க செயலை அனைவரும் பாராட்டுகின்றனர்.

மகேஷ் பாபு இவர் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர். தனது திறமையான நடிப்பால் தெலுங்கு ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்துள்ளார். இவருக்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டப்பெயரும் உண்டு. இவர் நடிப்பில் மட்டுமல்லாது பிசினஸில் தனது கொடியை நாட்டியுள்ளார்.

இவர் தெலுங்கில் மட்டுமல்லாது தமிழகத்திலும் பெருமளவு ரசிகர் பட்டாளங்களை கொண்டவர்.மற்ற தெலுங்கு படங்களை காட்டிலும் மகேஷ்பாபுவின் படங்கள் தமிழகத்தில் வசூல் வேட்டையாடும்.

தற்போது ஹைதராபாத்தில் ஏசியன் மகேஷ் பாபு சினிமாஸ் (AMB CINEMAS) என்ற பெயரில் ஏழு திரைகள் கொண்ட சூப்பர் பிளக்ஸ் திரையரங்கு ஒன்றை நிறுவியுள்ளார். மகேஷ்பாபு இவ்வளவு பிஸியாக இருக்கும் நேரத்தில், திடீரென அவர் அரசியலுக்கு வரப் போவதாக வதந்திகள் கிளம்பின.

ஆனால் முதலிலேயே சுதாரித்துக்கொண்ட மகேஷ்பாபு, என் வேலை நடிப்பது மட்டுமே அதை மட்டுமே நான் செய்ய விரும்புகிறேன் என்று அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இது ஒரு புறமிருக்க மகேஷ்பாபு, சமூக சேவைகளிலும் அதிக ஈடுபாடு கொண்டுள்ளார். இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளின் இருதய அறுவை சிகிச்சைக்கு உதவியுள்ளார். இவரின் இந்த சேவைக்காக அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

மகேஷ் பாபு தற்போது அணில் ரவுப்பிடி இயக்கத்தில் சரிலெரு நிகேவரு என்ற அதிரடி ஆர்மி குடும்ப படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த அதிரடியான குடும்ப படம் மகா சங்கராந்தி அன்று வெளிவரும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

Advertisement
To Top