Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய்க்கு நேரடியாக சவால் விட்ட மகேஷ் பாபு.. தளபதி அந்த சவாலை செய்வாரா?
தளபதி விஜய் தன்னுடைய சினிமா கேரியரில் பெரும்பாலான ரீமேக் படங்களில் நடித்துள்ளார். அதிலும் தெலுங்கில் மகேஷ்பாபு நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற படத்தின் ரீமேக்கில் தமிழில் விஜய்க்கு பெரிதும் கைகொடுத்தன.
தெலுங்கில் ஒக்கடு என்ற படம் தமிழில் கில்லி என்ற பெயரிலும், தெலுங்கிலும் தமிழிலும் போக்கிரி என்ற பெயரிலும் மகேஷ்பாபு நடித்த படங்கள் தளபதி விஜய்யால் ரீமேக் செய்யப்பட்டது.
அதுமட்டுமில்லாமல் தளபதி விஜய் மற்றும் மகேஷ்பாபு ஆகிய இருவருக்கும் ஒரு நல்ல விதமான புரிதல் உள்ளது. அதை பல பேட்டிகளில் மகேஷ்பாபு நேரடியாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அனைத்து நடிகர் நடிகைகளும் தற்போது ஊரடங்கு சமயத்தில் கிரீன் இந்தியா சேலஞ்ச் என்ற பெயரில் தங்களுடைய வீடுகளில் மரம் நட்டுவிட்டு அதை மற்றொரு நடிகர் நடிகைகளை செய்யச் சொல்லுமாறு சவால் விட்டு வருகின்றனர்.
அந்த வகையில் மகேஷ் பாபு தனது பிறந்தநாள் அன்று தன்னுடைய வீட்டில் மரக்கன்று ஒன்றை நட்டு வைத்தார். அதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் தளபதி விஜய், ஜூனியர் என்டிஆர், ஸ்ருதிகாசன் போன்றோரை டேக் செய்து இந்த சவாலை ஏற்றுக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.

mahesh-babu-challenge-to-vijay
இதனால் தற்போது தமிழக ரசிகர்கள் தளபதி விஜய் அந்த சவாலை ஏற்றுக்கொண்டு வீடியோ வெளியிடுவாரா என வெறி கொண்டு காத்திருக்கிறார்கள். கண்டிப்பா தளபதி இதை செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
