Tamil Cinema News | சினிமா செய்திகள்
பேட்ட படம் இவர்களுக்கு சமர்ப்பணம். லைக்ஸ் குவிக்குது மகேஷ் பாபுவின் ஸ்டேட்டஸ்.
பேட்ட
பேட்ட படத்தில் கார்த்திக் சுப்புராஜ் பழைய நக்கல், ஸ்டைல் உள்ள ரஜினியை மீண்டும் உயிர்ப்பித்துளார். நேற்று படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சூப்பர்ஸ்டாருக்கு படத்தில் காளி மற்றும் பேட்டை வேலன் என இரண்டு வெவேறு பரிமாணத்தில் ரோல்கள். ஸ்டைலிஷ் வார்டன் ஒருபுறம் என்றால், பிளாஷ் பேக்கில் கராத்தே பள்ளி நடத்தும் காவல்காரன்.

petta-review
அநிருத்தன் இசை, திருவின் ஒளிப்பதிவு மற்றும் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் படம் கட்டாயம் சூப்பர் ஹிட் வகையறா தான். பலரும் படத்தை பாராட்டி வரும் நேரத்தில், டோலிவுட் சூப்பர்ஸ்டார் நம் ஸ்பைடர் நாயகன் மகேஷ் பாபு, படத்தை பற்றி ட்வீட் பதிவிட்டுள்ளார்
“பேட்ட ரஜினிகாந்த் சார் ரசிகர்களுக்கு சமர்ப்பணம், என்னையும் சேர்த்து தான். ஒருவார்த்தையில் சொல்லவேண்டும் என்றால் தலைவா … . இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இங்கு உள்ள சிறந்த திறமையாளார், திருநாவுக்கரசின் ஒளிப்பதிவு எப்பவும் போல அருமை, படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
#Petta is a tribute to all the fans of @rajinikanth sir, including me… Only one word… Thalaiva…? @karthiksubbaraj you are one of the finest talents we have ? @DOP_Tirru outstanding as always ? Congrats to the entire team…????#Rajinified
— Mahesh Babu (@urstrulyMahesh) January 10, 2019
இந்த ஒற்றை ட்வீட் 33000 லைக், 7400 ரிட்வீட் கடந்து ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
