kamal-director-mahendranகடந்த வாரம் வெளியான தெறி படத்தில் முதன்முறையாக வில்லனாக நடித்து அனைவரையும் மிரட்டியவர் மகேந்திரன்.சூப்பர்ஸ்டாருக்கே பிடித்த இயக்குனர் என்று பெயர் பெற்ற இவரின் முள்ளும் மலரும் படம் காலத்தால் அழிக்க முடியாதவை.

இந்த படத்தில் வரும் செந்தாழம்பூவில் பாடல் இப்போதும் ரசிகர்களின் ரிப்பிட் பாடல். ஆனால் இந்த பாடல் ரசிகர்களுக்கு கிடைக்க காரணமாயிருந்தது உலகநாயகன் தானாம். இதுபற்றி இன்று நடந்த விக்ரம் பிரபுவின் வாகா பட இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் மனம் திறந்துள்ளார்.இதில் உலகநாயகன் உட்பட அனைவரும் சிவாஜியை பற்றி பேசினர்.

அப்போது பேசிய மகேந்திரன், நான் இந்த இடத்தில் கமலைப்பற்றி அனைவருக்கும் தெரியாத விஷயத்தை சொல்லாவிட்டால் பாவியாகிவிடுவேன்.முள்ளும் மலரும் படத்துக்கு சரியான ஒளிப்பதிவாளர் கிடைக்கவில்லை என்று கூறியபோது பாலுமகேந்திரா என்ற அற்புத கலைஞனை அறிமுகப்படுத்தினார்.

மேலும் செந்தாழம்பூ பாடலுக்கு தயாரிப்பாளர் சம்மதிக்காத போது தனது சொந்த செலவில் படம்பிடித்து படத்தில் இப்பாடலை இடம்பெற செய்தார் என்று கூறி நெகிழ்ந்தார்.