fbpx
Connect with us

Cinemapettai

இயக்குனர் மகேந்திரன் காலமானார்.! அதிர்ச்சியில் கோலிவுட்

mahendran

News | செய்திகள்

இயக்குனர் மகேந்திரன் காலமானார்.! அதிர்ச்சியில் கோலிவுட்

தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் மகேந்திரன். இவர் சமீபத்தில் சிறுநீரக கோளாறு காரணத்தால் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தமிழ் சினிமாவில்  பல நடிகர்களை வைத்து  பல படங்களை இயக்கியுள்ளார்.  ஏன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து முள்ளும் மலரும் ,ஜானி,  காளி போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இந்த திரைப்படங்கள் தமிழ் சினிமாவின்  வெற்றி திரைப்படங்களின் வரிசையில் இடம்பெற்றுள்ளன.

 அதுபோக  விஜய் நடிப்பில் வெளியான  தெறி படத்தில் அவருக்கு வில்லனாக கதாபாத்திரத்தில் நடித்து சமீபத்தில் புகழ் பெற்றார்.  பின்பு பேட்ட படத்தில் மீண்டும் ரஜினியுடன் கை கோர்த்து அந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார்.  சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியான boomerang படத்தில் நடித்தது தான் இவரது கடைசி திரைப்படம்.

ஆனால் தற்போது மகேந்திரன் மகன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய தந்தை இன்று காலை மரணமடைந்தார் என அதில் பதிவிட்டுள்ளார் அதனை பார்த்து பல பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top