விக்ரம் ஸ்கெட்ச் ரிலீசுக்கு பின், சாமி 2 , துரவநட்சத்திரம் படங்களில் பிஸி. இது முடித்த பின்னர் கமல் தயாரிப்பில் ராஜேஷ்.எம்.செல்வாவின் படத்தில் நடிக்கிறார்.

vikram

ஏற்கனவே ஆர்.எஸ்.விமலின் ‘மஹாவீர் கர்ணா’, படத்தில் கர்ணன் வேடத்தில் விக்ரம் நடிப்பதாக அதிகார பூர்வமான தகவல்கள் வெளியாகின. இப்படத்தின் ப்ரீ ப்ரோடுக்ஷன்ஸ் வேலைகள் நடந்து வருகின்றது.

Mahavir Karna

இந்தப் படம் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளது. முதலில் ஹிந்தியில் மட்டும் உருவாகும் என கூறப்பட்ட இந்த படம் தற்போது தமிழ், இந்தி என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் ரெடியாகவுள்ளது.

Mahavir Karna

மேலும் படம் தயாரானதும், ‘மஹாவீர் கர்ணா’ படத்தை 32 மொழிகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளாராம். உலகளவில் இப்படத்தை கொண்டு சேர்க்கும் விதமாக இம் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தோன்றிகிறது.

vikram

இதன் ஷூட்டிங்கை இந்தாண்டு (2018) அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளனர். படத்தை அடுத்த ஆண்டு (2019) டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்யவுள்ளனர்.