சென்னை: ஜோதிகா, சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்பிரியா ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் மகளிர் மட்டும். இந்த திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்குகொண்ட சிவக்குமார், ‘காந்தியடிகள் கஸ்தூரிபாயைக் கொடுமை செய்தார் என கூறினார்.

சூர்யாவின் 2டி கம்பெனி தயாரித்துள்ள படம் ‘மகளிர் மட்டும்’. இதில் ஜோதிகா, சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்பிரியா ஆகியோர் நடித்துள்ளனர். பெண்களை மையப்படுத்தி அவர்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசும்படம்.

இந்த படத்தின் ஆடியோ வெளியீடு அணமையில் நடந்தது. இதில் பேசிய சிவக்குமார், காந்தியடிகள் அவருடைய மனைவி கஸ்தூரி பாயைக் கொடுமைப்படுத்தினார் என்பது வரலாறு. இங்கு பெண்கள் ஒரு தாலிக்கயிற்றால் எல்லா உரிமைகளையும் இழந்து நிற்கின்றனர். அந்த நிலை மாற வேண்டும்” என்று கூறினார்.

இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படம் வரும் மே 12ஆம் தேதி வெளியாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.