சிம்பு செக்கச் சிவந்த வானம் படத்தில் நடிக்க தொடங்கியதிலிருந்து எந்த சர்ச்சையிலும் சிக்காமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று தான் இருக்கிறார்.

சிம்பு தற்போது சுந்தர் சி படத்திலும் வெங்கட் பிரபுவின் மாநாடு படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார், இந்த நிலையில் சுந்தர் சி இயக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகின்றது. இப்படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான Attarintiki Daredi படத்தின் ரிமேக்.

அதிகம் படித்தவை:  தொடரும் 'மெர்சல்- பாகுபலி' கனெக்க்ஷன்: இன்று வெளியாகிறது ப்ரோமோ வீடியோ.
simbu
simbu

இந்த திரைப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி தான் இசையமைக்கிறார். மேகா ஆகாஷ் மற்றும் காதரின் தெரசா ஹீரோயின்களாக நடிக்கினறனர். இந்நிலையில் சுந்தர் சி மற்றும் சிம்புவுடன் உள்ள போட்டோவை மகத் வெளியிட்டுள்ளார். மேலும் விரைவில் மற்ற தகவல்கள் என்றும் சொல்லியுள்ளார்.

நம் நெட்டிசன்கள் இரண்டாவது ஹீரோ மகத் என்று ஒரு புறம் சொல்லி வருகின்றனர் ஆனால் வேறு சிலரோ ஒரிஜினல் வெர்ஷன் சிங்கிள் ஹீரோ சப்ஜெக்ட் அதனால் நண்பன் கதாபாத்திரத்தில் தான் மகத் நடிப்பார் என்கின்றனர்.

அதிகம் படித்தவை:  இந்திய சினிமாவிலேயே முதல் முறையாக இந்த தேவி
str sundar c mahat

அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை நாமும் காத்திருப்போம்.