Connect with us
Cinemapettai

Cinemapettai

Reviews | விமர்சனங்கள்

மகேஷ் பாபுவின் மஹரிஷி பட திரை விமர்சனம்.

மகேஷ் பாபு சினிமா கேரியரில் 25 வது படம். பூஜா ஹெகிடே மற்றும் அல்லரி நரேஷ் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். தோழா படைப்புகழ் வம்சி படிப்பல்லி இப்படத்தை இயக்கியுள்ளார். ‘பரத் எனும் நான்’ படத்தை தொடர்ந்து தெலுங்கில் வெளியாவதாலும், விவசாயிகளின் பிரச்னையை பற்றிய படம் என்பதாலும், இதன் எதிர்பார்ப்பு அதிகம் தான். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என வாங்க பார்ப்போம் ..

கதை – ரிஷி குமார் என்பவர் அமெரிக்காவின் மிக பெரிய கம்பெனியின் CEO வாக நியமிக்கப்படுவதில் இருந்து ஆரம்பம் ஆகிறது இந்த பயணம். என்னடா சர்கார் விஜய் சாயல் உள்ளது, என யோசிக்கும் சமயத்தில் காலேஜ் பிளாஷ் பேக். நண்பன் பட விஜய் போல சுற்றி வருகிறார் ஹீரோ. காதலியாக பூஜா, ரூம் மேட்டாக அல்லரி நரேஷ். கடைசி பரீட்சையின் கேள்வித்தாள் திருட்டு விவகாரத்தில் மாட்டுவார் என எதிர்பார்த்த நேரத்தில், அதில் இருந்து தப்பித்து அமெரிக்க செல்கிறார். காதலியை பிரிந்து, நண்பனை மறந்து செல்லும் ஹீரோ, உண்மை புரிந்து இந்தியா வர, இடைவேளை.

பைப் லயன், வாயிலாக கேஸ். அதனை எதிர்த்து தனி ஆளாக போராடுகிறான் நண்பன், ஊரை காப்பாற்ற. ஹீரோ களத்தில் இறங்க, படம் விறுவிறுப்பாகிறது இரண்டாம் பாதியில். விவசாயிகளின் துயர் துடைத்தாரா, கார்ப்ரேட் வசம் இருந்து கிராமங்களை மீட்டாரா, மக்களிடம் விவசாயத்தின் அருமையை உணர வைத்தாரா, மீண்டும் அமெரிக்கா பறந்தாரா என்பதே மீதி கதை.

அலசல் – இப்படம் மகேஷ் பாபு ரசிகரால், மகேஷ் பாபு ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட ஒன்று என தான் சொல்ல வேண்டும். ஜாலியான முதல் பாதி, சில இடங்களில் எமோஷன். மாஸான இரண்டாம் பாதி என்று ரசிகர்களுக்கு செம்ம வேட்டை இப்படம்.

எனினும் படத்தின் ரன்னிங்க் டயம், சலிப்பை தட்டும் பாடல்கள், எளிதில் யூகிக்க முடிந்த திரைக்கதை என சற்றே சொதப்பல் தான்.

வெர்டிக்ட் – மாஸ் ஹீரோ மகேஷ் பாபுவை காண செல்பவர்களுக்கு ஹாப்பி தான் இப்படம். நடந்துவந்து மட்டுமே படத்தை ஹிட் அடிக்க இந்திய சினிமாவிலேயே இவர் ஒருவர் மட்டும் தான் உள்ளார் என்றால் அது மிகையாகாது.

ஆகமொத்தத்தில் தன்னை பற்றி மட்டுமே யோசிக்கும் ரிஷி என்பவன், எவ்வாறு மற்றவரை பற்றி சிந்திக்க ஆரம்பித்து மஹரிஷி ஆகிறான் என்ற பயணமே இப்படம்.  2.5 / 5 .

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top