விஜய் சேதுபதிக்கு போட்டியாக வரும் மகாராணி.. நித்திலனுக்கு ரஜினியிடமிருந்து வந்த அழைப்பு

கடந்த ஓராண்டுகளில் உண்மையாகவே ஒரு படம் 50 நாட்களைத் தாண்டி தியேட்டரில் ஓடி ஹிட் அடித்தது என்றால், அது நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான “மகாராஜா” தான். ஜூன் மாதம் 14ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆனது.

இரண்டு மாதங்களுக்கு மேல் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 20 கோடிகள் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் இன்று வரை 110 கோடிகள் வசூலித்துள்ளது. விஜய் சேதுபதி,2022ல் மாமனிதன் படத்துக்குப் பிறகு ஹிட்டான படம் மகாராஜா. 12 பட தோல்விகளுக்கு பிறகு மகாராஜா படம் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்திருக்கிறது.

மகாராஜா படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் லீலா பேலஸில் நடைபெற்றது. ஏழு வருடங்கள் கழித்து இந்த படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் வெற்றி பெற்றிருக்கிறார். இதற்கு முன் இவர் எடுத்த படம் குரங்கு பொம்மை. அந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

நித்திலனுக்கு ரஜினியிடமிருந்து வந்த அழைப்பு

மகாராஜா படத்தை பார்த்த ரஜினி நித்திலனை அழைத்து வெகுவாக பாராட்டி இருக்கிறார். வெறும் பாராட்டுகளுடன் மட்டுமே இந்த சந்திப்பு நடந்துள்ளது. தற்போது நித்திலன் நயன்தாராவை வைத்து பெண்களை மையமாக வைத்து இயக்கும் படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார்.

மகாராஜாவுக்கு போட்டியாக நயன்தாரா நடிக்கும் படத்திற்கு மகாராணி என்ற பெயர் வைத்துள்ளனர். பேஷன் ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கவிருக்கிறது. ஏற்கனவே நித்திலன் மகாராஜா படத்திற்கு முன்பு அவர்களுக்காக ஒரு படம் பண்ணுவதாக அக்ரிமெண்ட் போட்டியிருந்தாராம்

Next Story

- Advertisement -