சாவித்ரி

நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை மையமாக வைத்து தமிழ் மற்றும் தெலுங்கில் படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குனர் நாக் அஸ்வின். தெலுங்கில் மகாநதி என்றும் தமிழில் `நடிகையர் திலகம்’ எனப் பெயரிட்டுள்ளனர் இப்படத்திற்கு.

savitri-biopic

இந்தப் படத்தில், சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மான்.

Mahanathi dq keesu

சமந்தா ஜமுனாவாகவும், நாக சைதன்யா நாகேஸ்வர ராவாகவும் நடிக்கிறார்கள். இவர்கள் மட்டுமின்றி விஜய் தேவாரகொண்டா, ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ், மோகன் பாபு எனப் பலரும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் போஸ்டர் என சாவித்ரி – ஜெமினி கணேசன் தோற்றத்தில் கீர்த்தி சுரேஷும், துல்கர் சல்மானும் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.

Mahanathi

மேலும் இம்மாதம் 30ம் தேதி வெளியாகவிருந்த படம், கிராபிக்ஸ் பணிகளால் தள்ளிப்போனது. இந்நிலையில் இந்தப் படம், உலகம் முழுவதும் மே 9ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.