செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

விஜய் டிவிக்கு குட் பாய் சொல்லி சன் டிவிக்கு தாவும் மகாநதி சீரியல் நடிகை.. புதுசாக என்ட்ரி கொடுக்கும் வைஷாலி

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், காவேரி போதும் போதும் என்று சொல்லும் வரை விஜய், காவேரியின் பிறந்தநாளை வெவ்வேறு விதமாக வித்தியாசமாக கொண்டாடி வருகிறார். அந்த வகையில் இருவரும் கோவிலுக்கு போயிட்டு வீட்டுக்கு திரும்பும் பொழுது அங்கே விஜய்யை பார்த்த வெண்ணிலாவுக்கு சில பழைய ஞாபகங்கள் வந்துவிட்டது.

உடனே விஜய்யை பார்த்து பேசுவதற்காக வெண்ணிலா ஓடி வருகிறார். ஆனால் அதற்குள் விஜய் கார் எடுத்துட்டு வீட்டிற்கு வந்து விடுகிறார். அந்த வகையில் அடுத்து வெண்ணிலா கதை தான் ஆரம்பமாகப் போகிறது என்பதற்கு ஏற்ப ராகினி கண்ணில் மாட்டப் போகிறார். அத்துடன் ராகினி, காவிரியிடம் சொன்னபடி அதிர்ச்சியாகும் அளவிற்கு ஒரு சர்ப்ரைஸ் காத்துக் கொண்டிருக்கிறது.

அதை முடிந்தவரை இன்று உனக்கு கொடுத்து விடுவேன் என்று சொல்லி இருந்தார். அந்த வகையில் காவிரியின் பிறந்தநாள் முடியும் தருவாயில் ராகினி, வெண்ணிலாவை கூட்டிட்டு வந்து விடுவார். ஆனால் இங்கேதான் ஒரு சின்ன மாற்றம் ஏற்பட போகிறது. அதாவது வெண்ணிலாவின் கேரக்டருக்கு வேறு ஒரு நடிகை கமிட் ஆகி இன்று என்டரி கொடுக்கப் போகிறார்.

இதற்கு முன் வெண்ணிலா கேரக்டருக்கு வந்த கண்மணிக்கு தற்போது சன் டிவியில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் மகாநதி சீரியலில் இருந்து விலகுகிறார். அதனால் வெண்ணிலா கேரக்டருக்கு வரும் நடிகை முத்தழகு சீரியலில் அஞ்சலி கேரக்டரில் நடித்த வைஷாலி.

முத்தழகு சீரியலில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் வைஷாலி நடித்த எல்லா சீரியலுமே வில்லியாக தான் நடித்திருக்கிறார். அதேபோல மகாநதி சீரியலில் வெண்ணிலா கேரக்டரில் என்டரி ஆன பிறகு ராகினி உடன் சேர்ந்து விஜய் மற்றும் காவிரியை பிரிப்பதற்கு பிளான் பண்ணப் போகிறார்.

இனி வெண்ணிலாவின் ஆட்டம் ஆரம்பம் என்று சொல்வதற்கு ஏற்ப வைஷாலி, விஜய் மற்றும் காவிரியை வச்சு செய்யப் போகிறார். கூடவே ராகினி ஒரு பக்கம் குடைச்சல் கொடுத்து காவிரியின் நிம்மதியை கெடுக்கப் போகிறார். ஆனால் என்ன நடந்தாலும் விஜய் இருக்கும் வரை காவிரிக்கு ஒன்னும் ஆகாது என்பதற்கு ஏற்ப பார்த்துக் கொள்வார்.

- Advertisement -

Trending News