புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

விஜய் டிவி-க்கு டாடா காட்டிய நடிகை.. சன் டிவி செய்யும் அட்டூழியம்

மக்கள் மத்தியில் பீக்கில் சென்று கொண்டிருந்த பாக்கியலட்சுமி சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை போன்ற நாடகங்கள் சில மாதங்களுக்கு முன்பு பீக்கில் இருந்தது. இப்போது என்னவென்றால், மக்கள் சலித்து போயி அவர்களே சேனலை மாற்றி விடுகின்றனர். இன்னொரு பக்கம் என்னவென்றால் பிக் பாஸ் சீசன் 8-உம் மொக்கையாக தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தை சரியாக பயன்படுத்தியுள்ளது மற்ற ஒரு சேனல். இதனால் எப்படியாவது TRP-யை உயர்த்தவேண்டும் என்ற நோக்கத்தில், விஜய் டிவி காதல் காட்சிகளை தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது. ஜோடிகளை, நெருக்கமாக காட்டி, மக்களை உட்கார வைத்துவிடலாம் என்று திட்டம் போட்டு வருகிறது.

விஜய் டிவி-க்கு டாடா காட்டிய அந்த நடிகை

பொதுவாக சீரியல் டைரக்டர்கள் தான் நமக்கு ட்விஸ்ட் என்கிற பெயரில் விபூதி அடிப்பார். ஆனால் ஒரு நடிகை அந்த டைரக்டர்-க்கே விபூதி அடித்துள்ளார். மகாநதி சீரியலில், வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை கண்மணி, தற்போது சீரியலில் இருந்து விளக்கியுள்ளார்.

தற்போது இவருடைய காட்சிகளை தீவிரமாக முடித்து வருகின்றனர். இவர் விலக்கியதற்கு காரணம் சன் டிவி போட்ட கொக்கி தான். நடிகை கண்மணிக்கு சன் டீவியில் ஒளிபரப்பாக உள்ள ராகவி எனும் சீரியலில் ஹீரோயினாக நடிக்க உள்ளாராம்.

இதனால் அவர் இந்த சீரியலில் இருந்து வெளியேறியதாக கூறியுள்ளார். இந்த நிலையில், அடுத்ததாக வெண்ணிலாவாக யார் நடிக்க போகிறார் என்ற கேள்வி வந்தபோது, அதற்கான தேர்வை ஏற்கனவே இயக்குனர் செய்துவிட்டாராம்.

ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான முத்தழகு சீரியலில் அஞ்சலி எனும் வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த வைஷாலி தான் இனி வெண்ணிலாவாக நடிக்கப் போகிறார் எனத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Trending News