Connect with us
Cinemapettai

Cinemapettai

vikram-mahaan

Videos | வீடியோக்கள்

சரக்கு சாம்ராஜ்யத்தின் மகாராஜா எங்க அப்பன்.. துருவ் விக்ரம் மிரட்டும் மகான் பட டிரைலர்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகான் படத்தின் டிரைலர் இணையத்தை மிரட்டியுள்ளது. விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.

வித்தியாசமான கதைக்களத்தை ரசிகர்களுக்கு வெளியிடுவதில் கைதேர்ந்தவர் கார்த்திக் சுப்புராஜ். ரவுடி தனமான அப்பாவை மகனை வைத்து திருத்துவது போல கதைக்களம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரம் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருப்பது போல் தெரிகிறது.

காந்தி என்ற பெயரை வைத்துக் கொண்டு சாராய கடையை ராஜ்யம் நடத்தும் விக்ரம் எப்படி தனது அப்பாவின் ஆசையை நிறைவேற்றப் போகிறார் என்பதுதான் படத்தின் ட்விஸ்ட். முக்கியமாக சிம்ரன் இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் டிரெய்லர் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அதிக அளவில் கவர்ந்து வருகிறது. வரும் பிப்ரவரி 10ஆம் தேதி அமேசன் பிரைமில் வெளிவரும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

 

Continue Reading
To Top