Tamil Nadu | தமிழ் நாடு
50 லட்சம் கொடு இல்லை என்றால் உன்னை கொன்று 10 லட்சம் உனக்கு நான் தருகிறேன்.. போலிசை அதிர வைத்த கொள்ளையன்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஸ்ரீபுரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் தொழிலதிபரான மக்பூல் பாஷா. இவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பான புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அந்த புகாரில் அவர் தெரிவித்தது பின்வருமாறு.
கடந்த ஒன்றாம் தேதி பிற்பகல் 3 மணியளவில் எனக்கு ஒரு போன் கால் வந்தது அதில் பேசிய நபர் நீ எனக்கு 50 லட்சம் தரவேண்டும் இரண்டு நாட்களுக்குள் பணத்தை தரவில்லை என்றால் என்னையும் என் குடும்பத்தில் உள்ள யாராவது ஒரு நபரை கொன்றுவிடுவதாக கூறி பின்பு அதற்கு நஷ்ட ஈடாக 10 லட்சம் தருவேன் என அவர் தெரிவித்ததாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ரவுடி இம்ரான் கான் நான் பேசுவதை நீ மொபைலில் ரெக்கார்ட் செய்தாலும் எனக்கு ஒன்றும் பயமில்லை. இப்படிதான் காங்கிரஸ் பிரமுகர் அப்பாஸ் என்பவரை முதலில் மிரட்டி பின்பு அவரை நான்தான் கொலை செய்தேன் என்று அவர் உருது மொழியில் கூறியதாக கூறியுள்ளார்.
மேலும் இதுவரை பத்து பேரைக் கொலை செய்து உள்ளேன் என தெரிவித்ததை அடுத்து தொழிலதிபரான மக்பூல் பாஷா இணையதளத்தில் இம்ரான் கான் சொல்வது உண்மையா என தேடியுள்ளார் அப்போது அவர் கூறியது அனைத்தும் உண்மை என தெரிய வந்துள்ளது.
இதையடுத்து போலீசாரிடம் அவர் கொலை மிரட்டல் விடுத்த ஆதாரத்தையும் மேலும் உங்கள் குடும்பத்தில் யாராவது ஒருவர் கொலை செய்துவிட்டு நான் கொடுக்கும் 10 லட்சத்தை வைத்து இறுதி சடங்கை முடித்துக் கொள் என அவர் தெரிவித்ததையும் கூறியுள்ளார்.
இதையடுத்து தற்போது போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் பேரில் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
