Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் எடுத்த சரியான முடிவு.. தளபதி 65 படத்தின் மாஸ் அப்டேட்
தளபதி விஜய் பிகில் பட வெற்றியைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் 2020 கோடை விடுமுறை விருந்தாக வெளியாக இருக்கிறது. கத்தி படத்திற்கு பிறகு அனிருத் இந்த படத்திற்கு இசையமைப்பதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
இதனை தொடர்ந்து தளபதி 65 படத்தை யார் இயக்கப் போகிறது என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு முருகதாஸ், மோகன் ராஜா, அருண்ராஜ் காமராஜா போன்றோரின் பெயர்களை ரசிகர்கள் சிபாரிசு செய்து வருகின்றனர்.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் தடையறத்தாக்க, தடம் புகழ் மகிழ்திருமேனி கடந்த மாத இறுதியில் தளபதி விஜய்யை சந்தித்து கதை கூறியுள்ளார். இந்த கதை தளபதிக்கு பிடித்துப்போக உடனே செய்யலாம் என உறுதி அளித்துள்ளார்.
இதனால் உற்சாகமடைந்த மகிழ்திருமேனி தனது அடுத்த கட்ட வேலைகளை விரைவில் முடித்து விட்டு, அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் படப்பிடிப்பை தொடர்ந்து 2021 பொங்கல் வெளியீடாக படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த படத்திற்கு கில்லி, குருவி ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கூட்டணி மட்டும் உறுதியானால் தளபதி ரசிகர்களுக்கு இதைவிட பெரிய கொண்டாட்டம் எதுவும் இல்லை என்றே சொல்லலாம்.
