அவர்களால் என்னை திருப்தி படுத்த முடியாது.. பாலிவுட் நடிகர்களையே சீண்டி பார்த்த மகேஷ் பாபு

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் மகேஷ் பாபுவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அந்தவகையில் தமிழில் இவர் நடிப்பில் வெளியான ஸ்பைடர் திரைப்படம் இவருக்கு ஏராளமான தமிழ் ரசிகர்களையும் பெற்றுக் கொடுத்தது.

இந்நிலையில் இவர் தற்போது பாலிவுட் திரையுலகம் பற்றி பேசிய ஒரு கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இவரிடம் நீங்கள் ஏன் இந்தி திரைபடங்களில் நடிப்பதில்லை என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் எனக்கு தெலுங்கு சினிமாவில் நடிப்பதுதான் பிடித்திருக்கிறது என்றும், பாலிவுட்டில் நடிக்கும் எண்ணம் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஹிந்தி படங்களில் நடிப்பதற்கு பல வாய்ப்புகள் வந்ததாகவும், ஆனால் நான் அந்த வாய்ப்புகளை நிராகரித்து விட்டேன் என்றும் அவர் கூறியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணத்தையும் அவர் கூறியிருக்கிறார்.

அதாவது பாலிவுட் சினிமாவில் நான் கேட்கும் சம்பளத்தை தர முடியாது. அதனால் நான் என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. இங்கு நடித்துக்கொண்டே இந்திய அளவில் ரசிகர்களை மகிழ்விக்க என்னால் முடியும் என்று ஒரு ஷாக்கான பதிலை கொடுத்திருக்கிறார்.

பாலிவுட் திரையுலகால் நான் கேட்கும் சம்பளத்தைக் கொடுக்க முடியாது என்று மகேஷ்பாபு கூறியது தற்போது பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்ற ஒரு ஆர்வமும் பலருக்கும் எழுந்துள்ளது.

அவர் இதுவரை 60 கோடி ரூபாய் சம்பளத்தை ஒரு படத்திற்காக வாங்கி வந்தார். ஆனால் சமீபகாலமாக அவர் தன்னுடைய சம்பளத்தை ஏற்றி கிட்டத்தட்ட 80 கோடி ரூபாய் வரை வாங்கி வருகிறார். அப்படியிருக்கும்போது ஹிந்தி திரையுலகில் அவர் எதிர்பார்க்கும் இந்த சம்பளத்தை கொடுப்பது சந்தேகம்தான்.

ஏன் என்றால் ஹிந்தியில் கான் நடிகர்கள் என்று சொல்லப்படும் ஷாருக்கான், அமீர்கான், சல்மான்கான் போன்ற முன்னணி நடிகர்களுக்கே 80 கோடி ரூபாய்தான் சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் நான் கேட்கும் சம்பளத்தை அவர்களால் கொடுக்க முடியாது என பாலிவுட் நடிகர்களை சீண்டும் விதத்தில் மகேஷ் பாபு பேசியுள்ளார்

மேலும் மகேஷ்பாபு தற்போது ராஜமௌலி இயக்கத்தில் படம் நடிப்பதாக கூறப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த படத்தில் அவருக்கு நூறு கோடி ரூபாய் சம்பளம் வழங்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்