ஐதராபாத்: மகேஷ் பாபு நடிக்கும் புதிய படத்தில் தோனி படத்தில் நடித்த நாயகி, ஜோடியாக நடிக்கவுள்ளார்.

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘ஸ்பைடர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இன்னும் ஒரு பாடல் மட்டுமே படமாக்கப்பட வேண்டும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார். விரைவில் படப்பிடிப்பு முடிந்து விடும் என்று கூறப்பட்டுள்ளது. படம் அடுத்த ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி, சங்கராந்தி திருநாளை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரபல இயக்குநர் கொரடலா சிவா உடன் மகேஷ் பாபு இணைய உள்ளார்.

அதிகம் படித்தவை:  ஹீரோவாக களம் இறங்கும் ஜனகராஜ் ! தலைப்பு, இயக்குனர் விவரம் உள்ளே !

இப்படத்தை டிவிவி தனய்யா தயாரிக்கவுள்ளார். படத்திற்கு ‘பாரத் அனே நேனு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் மகேஷ் பாபுவிற்கான ஜோடியை தேடி வந்த நிலையில், தற்போது தோனி படத்தில் நடித்த கியரா அத்வானி ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படத்தில் தோனியின் 2வது காதலியாகவும், மனைவியாகவும் கியரா அத்வானி நடித்தது குறிப்பிடத்தக்கது.