Tamil Cinema News | சினிமா செய்திகள்
மாஃபியா படத்தால் கேலி கிண்டலுக்கு ஆளான பிரியா பவானி சங்கர்.. அரசனை நம்பி புருசனை விட்டோமே என புலம்பல்
அருண் விஜய் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த மாஃபியா படம் மக்களிடையே போதுமான வரவேற்பை பெறவில்லை என்றாலும் வசூல் ரீதியில் வெற்றி அடைந்ததாக தெரிவித்துள்ளனர்.
பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளிவந்த கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மேயாத மான் போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவரின் நடிப்பு இந்தப் படங்களில் மிகவும் பேசப்பட்டது, கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்திக்குடன் நடித்த காட்சிகள் அனைத்தும் தத்துரூபமாக அமைந்தது.
சமீபத்தில் வெளிவந்த மாஃபியா படத்தில் ப்ரியா பவானி சங்கரின் கதாபாத்திரம் ரசிகர்களை எதிர்பார்த்த அளவு கவரவில்லை. ஏனென்றால் ரொமான்டிக், குடும்ப கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான பிரியா பவனி சங்கர் முதல் முறையாக ஆக்ஷன் படத்தில் நடித்திருக்கிறார்.
ஆக்ஷன் காட்சிகளில் அருண் விஜய்யுடன் துப்பாக்கியை தூக்கிக்கொண்டு ஓடும்போதே தெரிந்துவிட்டது அவருக்கு இது செட்டே ஆகாது என்று. இந்த மாதிரி ஆக்சன் காட்சிகளில் நடிப்பதற்கு முன்னதாக நயன்தாரா, ஆண்ட்ரியா போன்றவர்கள் நடித்த காட்சிகளை பார்த்து இருந்தால் இதுபோன்ற நிலைமை ஏற்பட்டிருக்காது.
காரணம் நயன்தாரா மற்றும் ஆண்ட்ரியா இதுபோன்ற காட்சிகளுக்கு உடற்பயிற்சி செய்து அந்த கதாபாத்திரமாகவே மாறி விடுவார்கள். அதனால்தான் அவர்கள் தற்போது உச்சத்தில் இருக்கிறார்கள்.

priya
முயற்சி செய்வது என்று முடிவெடுத்து விட்டால் குறைந்தபட்சமாவது அந்த கதாபாத்திரமாக மாற முயற்சி செய்ய வேண்டும். தவறினால் இதுபோன்ற கேலி கிண்டல்களுக்கு ஆளாவார்கள் என்பதற்கு பிரியா பவானி சங்கர் ஒரு எடுத்துக்காட்டு.
பிரியா பவானி சங்கர் மாஃபியா படத்தில் காமெடி இல்லாத குறையை தீர்த்து வைத்து விட்டார் என்றே கூறலாம். இரண்டாம் பாகத்தில் இதேபோல் சொதப்பாமல் இருப்பதற்கு கடுமையான முயற்சி எடுத்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்.
