fbpx
Connect with us

Cinemapettai

ஓவர் விளம்பரம்.. டிக்கெட் புக் பண்றதுக்கு முன்னாடி இத படிச்சிட்டு போங்க.. மாஃபியா திரைவிமர்சனம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஓவர் விளம்பரம்.. டிக்கெட் புக் பண்றதுக்கு முன்னாடி இத படிச்சிட்டு போங்க.. மாஃபியா திரைவிமர்சனம்

இந்த படத்தைப் பொருத்தவரை அருண்  விஜயோட ஸ்டைலிஷான நடிப்பு ரசிக்க கூடியது. சித்திரம் பேசுதடி பிரசன்னாவை மீண்டும் நினைவு படுத்திய மாஃபியா அந்த அளவிற்கு வில்லன் கதாபாத்திரத்தில் யதார்த்தமான நடித்துள்ளார்.

படத்தின் பேக்ரவுண்ட் மியூசிக் கனகச்சிதமாக அமைந்துள்ளது. ஆண்ட்ரியா மற்றும் நயன்தாரா நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் பிரியா பவானி ஷங்கரை வெச்சு நம்மள செஞ்சுட்டாங்க. அதாவது ஆக்சன் காட்சிகள் செட்டே ஆகல, அப்பப்போ இங்கிலீஷ்ல டயலாக் பேசுறாங்க, அங்கேயும் இங்கேயும் துப்பாக்கியை வச்சிட்டு நடக்கிறார்கள் அவ்வளவுதான். ஒரு சில கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று தான் கூறவேண்டும்.

சரி இப்போ கதை என்னன்னு பார்த்தா ஒரு பெரிய போதை மருந்து கடத்தல் கும்பல் உள்ளது. அவர்களை கண்டுபிடிக்க அருண் விஜய் மற்றும் அவருடைய டீம் களத்தில் குதிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் போதை மருந்து கடத்தல் லாரி ஒன்று அருண் விஜய்யிடம் வசமாக சிக்குகிறது. அதை திரும்ப கொண்டுவர சொல்லி பிரசன்னா அருண் விஜயோட குடும்பத்தை கடத்தி வைத்து மிரட்டுகிறார்.

குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறார்? போதை மருந்து கடத்தல் தலைவனை சந்தித்தாரா? இல்லையா? என்பதை சுவாரஸ்யம் குறைவாக படமாக்கியுள்ளார் கார்த்திக் நரேன். இதுல முக்கியமா ஹோட்டல்ல ஒரு சண்டைக்காட்சி எடுத்து இருக்காங்க, அதைப் பார்க்கும்போது மேக்கிங் வீடியோ ரிலீஸ் பண்ணா எப்படி இருக்கும் அதே மாதிரி இருந்துச்சு.

உண்மையா பார்த்தா என்ன நடந்திருக்கும்னா கார்த்திக் நரேன் ஒரு 2.15 மணி நேரம் ஓடுற மாதிரி கதை சொல்லி இருப்பாரு போல, ஆனால் உள்ளே யாரோ புகுந்து இது நம்ம ரெண்டு பாகமா எடுத்த எப்படி இருக்குனு சொல்லி மட்டமான ஒரு ஐடியா கொடுத்து இருக்காங்க.

அதனால இப்ப என்ன ஆச்சு படம் முழுக்க காட்சிகள் மிகவும் மெல்ல மெல்ல நகர்கிறது அதாவது 45 நிமிடத்தில் முடிய வேண்டிய படம் 1.54 மணி நேரம் எடுக்கப்பட்டுள்ளது.

ரொமான்ஸ் பண்ணக்கூடிய ஒரு கதாநாயகியை ஆக்சன் கதாபாத்திரத்தில் போட்டது கதைக்கு பொருந்தவே இல்லை. அருண் விஜய்க்கு பொருத்தமாக ஆண்ட்ரியாவோ அல்லது நயன்தாராவோ இந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.

படத்தின் இறுதி கட்டத்தில் வரும் 15 நிமிட காட்சிகள் ரசிக்கக் கூடியதாக இருந்தது. அதுவும் இரண்டாம் பாகம் வரும் என்பதை தெரிவிப்பதற்காக அந்த கதைக்களம் நகரும். ரசிகர்களின் கருத்து என்னவென்றால் அந்த இரண்டாம் பாகம் இல்லாமல் ஒரே படமாக கொடுத்து இருந்தால் கண்டிப்பாக இந்த படம் மக்களிடையே எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பு பெற்று இருக்கலாம்.

மாஃபியா படத்தின் பிரஸ்மீட்டில் கூட அருண்விஜய் சொல்லி இருப்பாரு இப்ப வரைக்கும் என்ன படம் பார்க்க விடவில்லை. ஒருவேளை அருண் விஜய் இந்தப் படத்தை பார்த்து இருந்தால் கண்டிப்பாக ஒரு சில திருத்தங்கள் நடந்திருக்கும். அருண்விஜய்,பிரசன்னா நடிப்பிற்காக ஒரு முறை பார்க்கலாம். மொத்தத்துல ஓவர் விளம்பரம் உடம்புக்கு ஆகாது என்பது நிதர்சனமான எடுத்துக்காட்டு இந்த மாஃபியா.

சினிமாபேட்டை Rating – 2/5

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top