Tamil Cinema News | சினிமா செய்திகள்
திடீரென ஐந்து மடங்கு சம்பளத்தை உயர்த்திய அருண்விஜய்.. தலையில் அடித்து கொள்ளும் தயாரிப்பாளர்கள்
விடாமுயற்சி செய்தால் விஸ்வரூப வெற்றி கிடைக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார் நடிகர் அருண் விஜய். நீண்ட நாட்களாக வெற்றிக்கு காத்துக் கொண்டிருந்தவருக்கு தொடர் வெற்றிகள் கிடைத்துக் கொண்டிருக்கிறது.
சினிமாவில் தனக்கென ஒரு பாதையை அமைத்துக் கொள்ள கிட்டத்தட்ட அவருக்கு பத்து வருடங்களுக்கு மேல் ஆகி உள்ளது. என்னை அறிந்தால் படத்தில் நடித்த பிறகு அவரது சினிமா மார்க்கெட் எக்கச்சக்கமாக எகிறியுள்ளது.
லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அருண் விஜய், ப்ரியா பவானி சங்கர், வில்லனாக பிரசன்னா நடித்துள்ள படம்தான் மாஃபியா. துருவங்கள் 16 புகழ் கார்த்திக் நரேன் தான் இயக்கியுள்ளார். அருண் விஜய்க்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர், வில்லனாக பிரசன்னா நடிக்கிறார். ஜேக்ஸ் பிஜாய் இசை. கோகுல் பினாய் ஒளிப்பதிவு. ஸ்ரீஜித் சாரங் எடிட்டிங்.
தற்போது மாஃபியா படம் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது மட்டுமில்லாமல் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது உறுதி தான் என்பதை படத்தின் இறுதிக்கட்டத்தில் தெரிவித்துள்ளனர் படக்குழு.
இந்த படத்தின் வெற்றிக்கு அடுத்தபடியாக அருண் விஜய் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார். அதாவது 1 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார் அருண் விஜய் தற்போது 5 கோடியாக உயர்த்தி உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவரின் அசுர வளர்ச்சிக்கு இந்த சம்பளம் சரியானதுதானா என்பதை மாஃபியா படத்தின் மொத்த வசூல் மூலம் தெரிந்துகொள்ளலாம் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
