Tamil Cinema News | சினிமா செய்திகள்
சசிகலாவுக்கு எதிராக திரும்பிய அமைச்சர் பாண்டியராஜன்.. டுவிட்டரில் பரபரப்பு தகவல்
தற்போதைய தமிழகத்தின் அசதாரண அரசியில் சூழ்நிலையில் ஆளுநர் யாரை முதல்வர் பதவி ஏற்க அழைப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒருபக்கம் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது. சசிகலாவுக்கு எதிர்ப்பு அதிகரித்து ஆதரவு குறைந்து வருகிறது. இன்று கூட மேலும் 2 எம்.பிகள் பன்னீருக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் இதுவரை சசிகலாவுக்கு ஆதரவாக இருந்து வந்த அமைச்சர் பாண்டியராஜன் இன்று டுவிட்டரில் பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், மக்கள் குரலுக்கு செவி மடுப்பேன். நிச்சயமாக வாக்களித்த மக்களின் குரலுக்கு மதிப்பளித்து செயல்படுவேன். ஜெயலலிதாவின் புகழ் மற்றும் அதிகமுவின் ஒற்றுமைக்கு பங்கம் வராத வகையில் முவெடுப்பேன் என கூறி உள்ளார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது தன்னுடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம்தான் என்று அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
