மேயாத மான், ரத்ன குமார் என்ற குறும்பட இயக்குனர் எடுத்துள்ள முதல் திரைப்படம். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தான் இப்படத்தின் தயாரிப்பாளர்.   வைபவ், விவேக் பிரசன்னா, பிரியா பவானி ஷங்கர், இந்துஜா நடிப்பில்  நம் நார்த் மெட்ராஸ் பின்னணியில் உருவான படம். சந்தோஷ் நாராயணன், பிரதீப் குமாரின் இசை, விது அயன்னாவின் ஒளிப்பதிவு ஆகியவை படத்துக்கு பலம் சேர்தன.

வழக்கமான ஒருதலைக் காதல் கதையை நட்பு, இசை, தங்கை  பாசம் என்று  கலந்து வித்தியாசமான திரைக்கதையுடன் எடுக்கப்பட்ட படம்.  வடசென்னை மக்களின் வாழ்வை நம் கண் முன்னே கொண்டு வந்த படம்.

படத்தில் வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. இந்துஜா வேலூரைச் சேர்ந்தவர். மீடியாவின் மீது  ஆர்வம் கொண்ட இவர் ‘மேயாத மான்’ படத்தின்  ஆடிஷனில் கலந்துகொண்டு படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

நார்த் மெட்ராஸ் பெண்ணாக நைட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு, அனபெலே பாட்டுக்கு  இவர் போட்ட ஆட்டத்தை அனைவரும் ரசித்தனர். ‘ஏரியா கெத்து’ காட்டுவதும், அண்ணனின் காதலியைப் பார்க்க ஆசைப்படுவது , அண்ணனின் நண்பனை ஒரு தலையாக காதலித்து அதை மறைத்து உருகுவது என்று ஆச்சர்யமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதிலும், ‘‘தங்கச்சி, தங்கச்சின்னு சொல்லிகிட்டு என்னை தொடாத’’ என சீறுவதிலும், ‘‘அவன் தங்கச்சின்னு சொல்றதுதான் பிரச்சினையே’’ என அண்ணனிடம் வெறுப்பில் சொல்வதும்.. பக்கா பக்கத்துவீட்டு  பெண்.

இந்த மாதிரி கலக்கியதால் தான் என்னவோ,  படம் வெளிவருவதற்கு முன்பே அடுத்த  வாய்ப்பு கிடைத்தது. தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக நடிக்கும் ‘பில்லா பாண்டி’ படத்தில் நடிக்கிறார் இந்துஜா. படத்தில் சாந்தினியும்  நடிக்கிறார்.

‘மேயாத மான்’ படத்தில் சென்னை பெண்ணாக கலக்கியவர்; பில்லா பந்தியில்  மதுரைக்காரப் பெண்ணாக கலக்க இருக்கிறார்.

தமிழ் பேசத்தெரிந்த இன்னொரு நடிகையாக வளர்ந்து வருகிறார். தமிழ் சினிமாவில்  நல்லதொரு எதிர்காலம் அமைய நாமும் வாழ்த்துவோம் இந்துஜாவை.