iIllayaraj_Cinemapettai

மிக்ஸிங் ஒரு கலை..!

“மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்”  ‘அச்சாணி’ பாடல் கேட்டிருக்கிறீர்களா?

அந்தப் பாடலில் டியூனையும் , வார்த்தைகளையும் அழகாக மிக்ஸ் செய்து கலந்து , அற்புத ‘பாவத்தில்’ ஏதோ ஒன்றை உணர்த்தி இருப்பார் இளையராஜா!

இதோ…அது பற்றி இளையராஜாவின் வார்த்தைகளில் :

“ஜானகி வந்தார். ‘மாதா உன் கோவிலில்’ பாடலை எடுத்துவிட, ஒத்திகை பார்த்து ‘டேக்’ போகலாம் என்று தொடங்கினோம்.இந்தப் பாடலை எடுத்துக் கொண்டிருக்கும்போதே நிறைய சங்கதிகள் கற்பனையில் வர, ஜானகியிடம் அவ்வப்போது சென்று மாற்றிக்கொண்டே இருந்தேன். நன்றாக வந்து கொண்டிருந்தது.

மூன்றாவது சரணத்தில் ஜானகி பாடும்போது ,”பிள்ளை பெறாத பெண்மை தாயானது…
அன்னை இல்லாத மகனை தாலாட்டுது”- என்ற வார்த்தைகளை அழகாகப் பாடிக் கொண்டே வந்தவர், அதற்கப்புறம் தொடர்ந்து பாடாமல் விட்டு விட்டார்.

“ஐயோ நன்றாக இருந்ததே! ஏன் அடுத்த அடியை விட்டு விட்டீர்கள்?” என்று ஜானகியை கேட்டேன்.  யாரும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்கள்.

அதிகம் படித்தவை:  தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது நடிப்பால் உருவாக்கி, அவர்கள் மனத்தில் ‘தல’ என்று நிலைத்திருப்பவர்.

கோவர்த்தன் சார் ‘வாய்ஸ் ரூமை’ கைகாட்டி ஏதோ சொன்னார். என்னவென்று புரியாமல் ‘வாய்ஸ் ரூமை’ பார்த்தால், கண்ணாடி வழியே ஜானகி கர்ச்சிப்பால் கண்களை துடைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

விஷயம் என்னவென்று பார்த்தால், ஜானகி இப்படிச் சொன்னார்: “டியூனும் வார்த்தையும் கலந்து ‘பாவத்தில்’ ஏதோ ஒன்றை உணர்த்திவிட, அழுகை வந்துவிட்டது.

அழுகையோடு பாடவும் முடியாமல், அழுகையை நிறுத்தவும் முடியாமல் விட்டுவிட்டேன்.” ஜானகி இப்படிச் சொல்லி முடித்ததும் எல்லாரும் உருகி விட்டார்கள்.

”ஆம்..ஜானகி சொன்னது போல….டியூனையும் வார்த்தையையும் கலந்து , அந்த ‘பாவத்தில்’ ஏதோ ஒன்றை உணர்த்தும் அந்த மிக்ஸிங் வித்தை ,இளையராஜாவுக்கு தெரிந்திருந்தது …!

அதை தன் குரலோடு அழகாக மிக்ஸ் செய்து கொடுக்கும் மிக்ஸிங் வித்தைஎஸ்.ஜானகிக்கு நன்றாகவே புரிந்திருந்தது ..!

சொல்லப் போனால் தமிழ் சினிமாவில் நவரசங்களையும் தன் குரலில் அழகாக மிக்ஸ் செய்து அசத்திய ஒரே பாடகி எஸ்.ஜானகி மட்டும்தான்..!

அதிகம் படித்தவை:  வலைத்தளங்களில் அதிகமாக ஷேர் செய்யப்பட்ட செலிபிரிட்டி புகைப்படங்கள் - ஒரு தொகுப்பு.

உங்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன்..!

“சிங்காரவேலனே தேவா” பாடலிற்கான காருகுறிச்சி அருணாசலத்தின் நாதஸ்வர இசை மட்டும் , முதலில் தனியாக வேறு ஒரு ஸ்டூடியோவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது…!

யார் யார் குரலையோ ஒலிப்பதிவு செய்து ,அந்த நாதஸ்வர இசையுடன் மிக்ஸ் செய்து பார்த்தாலும் , கொஞ்சம் கூட ஒட்டவில்லை…பி.சுசீலா குரல் உட்பட…!

கடைசியாக எஸ்.ஜானகியின் குரல் தனியாக ஒலிப்பதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே ஒலிப்பதிவு செய்யப்பட்ட நாதஸ்வர இசையுடன் மிக்ஸ் செய்யப்பட்டது …!

இரண்டையும் அழகாக , அளவாக மிக்ஸிங் செய்ததால்தான் , அந்தப் பாடல் சாகாவரம் பெற்று , இன்றும் சரித்திரம் படைக்கிறது..!

ஏப்ரல் 23…
எஸ்.ஜானகிக்கு நேற்று பிறந்த தினம்…!

இளையராஜா இசையுடன் ,எஸ்.ஜானகியின் குரல் மிக்ஸ் ஆன அந்தக் கால பாடல்கள்… வேறு எந்த மிக்ஸிங்கும் , இந்த அளவுக்கு மக்களை கவரவில்லை..!

இதன் பெருமை இளையராஜாவை சேருமா..? எஸ்.ஜானகியை சேருமா..? மிக்ஸிங்கையே சேரும்..!ஆம்…மிக்ஸிங் ஒரு கலை..!