‘சகாப்தம்’ படத்திற்கு பிறகு விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் கதையின் நாயகனாக நடிக்கும் படம் ‘மதுரவீரன்’.இப்படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது.

வி ஸ்டுடியோஸ் மற்றும் பி.ஜி.முத்தையா ஒர்க்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசை அமைக்கிறார். பி..ஜி.முத்தையா அவர்கள் ஒளிப்பதிவு செய்து படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் சண்முக பாண்டியன் ஜோடியாக புதுமுக நாயகி மீனாட்சி நடிக்கிறார். இவர்களுடன் சமுத்திரகனி, ‘வேல’ ராமமூர்த்தி, மைம்கோபி, பி.எல்.தேனப்பன், மாரிமுத்து, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

Premalatha, Shanmuga Pandian, PG Muthaiah @ Madhura Veeran Movie First Look Launch Stills

ஜல்லிக்கட்டு விளையாட்டை கருவாக கொண்ட இந்த படத்தின் டீஸர் ஆகஸ்ட் மாதம் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து முதல் சிங்கிள் பாடலான ‘என்ன நடக்குது நாட்டுல…’ வெளியானது. மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது இப்பாடல்.

அதிகம் படித்தவை:  சிம்பு அருண் விஜய் அதிரடியில் "செவந்து போச்சு நெஞ்சு" வீடியோ பாடல்.


இந்த பாடல் சமூகத்தில் நடக்கும் அவலங்களை துகிலுரித்து காட்டும் விதமாக அமைந்துள்ளது.சந்தோஷ் தயாநிதி இசை அமைக்க, இப்பாடலை கவிஞர் யுகபாரதி எழுதியுள்ளார். ஜெயமூர்த்தி பாடியுள்ளார்.

அரசியல் கட்சி பொதுகூட்டங்களிலும் இப்பாடல் தற்போது முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்நிலையில், சிங்கப்பூரில் சிகிச்சையை முடித்துவிட்டு, சமீபத்தில் சென்னை வந்து  விஜயகாந்த் `மதுர வீரன்’ படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது …

சினிமாபேட்டை காமெண்ட்ஸ்

ஒரு கல்லுல ரெண்டு மாங்கா. கலக்குங்க சீனியர் அண்ட் ஜூனியர் கேப்டன் !