விஜய் டிவியில் ‘கலக்க போவது யாரு’வில் தொடங்கி அதன்பின்னர் சன் டிவியில் ‘அசத்த போவது யாரு’ நிகழ்ச்சியில் அசத்திய மதுரை முத்து தற்போது தேவதர்ஷினியுடன் சன் டிவியில் காமெடி கலாட்டா என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் மதுரை முத்துவின் மனைவி ஒரு கார் விபத்தில் அகால மரணம் அடைந்தார். மனைவி இழந்த சோகத்தில் இருந்த மதுரை முத்து தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும், திருமண கோலத்துடன் மதுரை முத்து தனது புதிய மனைவியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றும் தற்போது டுவிட்டரில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் உண்மையா? இரண்டாவது திருமணம் நடந்தது உண்மையா? என்பதை மதுரை முத்துதான் விளக்க வேண்டும்