பெரிய பெரிய தலைகளை குறிவைக்கும் முன்னணி தயாரிப்பாளர்.. முதல் ஆளாய் தூண்டிலில் சிக்கிய சந்தானம்

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தர் மதுரை அன்புச்செல்வன். இவர் தன்னுடைய கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார். சமீபத்தில் அன்புச் செழியன் இல்லத் திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

தயாரிப்பாளர் அன்புச்செழியன் இன் மகள் சுஸ்மிதா சன் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் சரண் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதில் ஏராளமான திரை பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த திருமண நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமலஹாசன் என முன்னணி நடிகர்களும், பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். விஜய், அஜித்தை தவிர மற்ற பிரபலங்கள் அனைவரும் வந்து மணமக்களை வாழ்த்தினர்.

அதேபோல் அரசியல் தலைவர்களில் முதலமைச்சர் ஸ்டாலின் கூட வந்து விழாவை சிறப்பித்து வைத்தார். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து அரசியல் தலைவர்களும் இவ்விழாவில் பங்கேற்றனர். சுஷ்மிதா சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் உளவியல் பாடத்தில் இளநிலைப் பட்டமும் அதைத் தொடர்ந்து எம்பிஏ பட்டமும் பெற்றிருக்கிறார்.

சுஷ்மிதா தற்போது கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார். இவர் 25 வயதில் 50 க்கும் மேற்பட்ட திரையரங்குகளை நிர்வகித்து வருகிறார். தற்போது அன்புச் செழியன் ஐந்து படங்களை தயாரிக்க இருக்கிறார்.

அதில் இரண்டு படங்கள் சந்தானத்தின் படங்களை தயாரிக்க உள்ளார். இதை தொடர்ந்து தனுஷின் ஒரு படத்தையும் தயாரிக்க உள்ளார். இது தவிர இன்னும் இரண்டு படங்களில் பெரியதலைகளிடம் பேசிக் கொண்டிருக்கிறார். பேச்சுவார்த்தை முடிந்தவுடன் விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்