18 வருடங்களுக்கு பின் 'செக்க சிவந்த வானம்' படத்திற்காக தன் பாணியில் இருந்து விலகும் மணிரத்தினம் ! - Cinemapettai
Connect with us

Cinemapettai

18 வருடங்களுக்கு பின் ‘செக்க சிவந்த வானம்’ படத்திற்காக தன் பாணியில் இருந்து விலகும் மணிரத்தினம் !

News | செய்திகள்

18 வருடங்களுக்கு பின் ‘செக்க சிவந்த வானம்’ படத்திற்காக தன் பாணியில் இருந்து விலகும் மணிரத்தினம் !

காற்று வெளியிடை படத்திற்கு பிறகு இயக்குனர் மணிரத்தினம் ஒரு படத்தை இயக்க உள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும் இந்த படத்தில் மல்டி ஸ்டார்களை வைத்து இயக்க இருக்கிறார் என்பதும் ஊர் அறிந்த விஷயமே.

செக்க சிவந்த வானம்

இப்படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், மாடல் டயானா எர்ரப்பா ஆகியோர் புதிதாக இணைந்துள்ளனர்.

CCV

தமிழில் “செக்க சிவந்த வானம்” என தலைப்பும், தெலுங்கில் “நவாப்” எனவும் பெயர் சூட்டியுள்ளனர்.

மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் உடன் இணைந்து இப்படத்தை சுபாசங்கரனின் லைக்கா ப்ரோடுக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

Mani_Ratnam_with_his_wife_Suhasini

மெட்ராஸ் டாக்கீஸ்

மணிரத்தினம் இயக்கி பாலசந்தர் தயாரிப்பில் 1992 வில் வெளியான படம் ரோஜா. அதன் பின் மணிரத்தினம் தன் அண்ணன், மற்றும் மனைவி இருவருடனும் இணைந்து ஆர்மபித்தது தான் “மெட்ராஸ் டாக்கீஸ்” தயாரிப்பு நிறுவனம். இருவர் தான் அந்த பயனரின் முதல் படம். ஆரம்பகாலங்களில் வேறு சிலருடன் இணைந்தும் படங்களை தயாரித்தார்.

ManiRantham

பின்னர் அலைபாயுதே படத்தில் இருந்து தனித்து தயாரித்து வருகிறார். மணிரத்தினம் வெளியாட்கள் பேனரில் படம் இயக்குவதில்லை, மேலும் பைனான்ஸும் பெறமாட்டார். . ரிலையன்ஸ் மற்றும் தேனாண்டாள் ஸ்டுடியோஸ் பட வெளியீடு செய்யவதற்கு மட்டுமே உதவுவர்.

இந்நிலையில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் கழித்து, வேறு நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளார் என்பது தான் ஆச்சர்யமான விஷயம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top