IIT Course: அடுத்து என்ன படிக்கலாம்.? IIT அறிமுகப்படுத்தும் சூப்பர் கோர்ஸ், 100% வேலைக்கு கேரண்டி

IIT Course: பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வந்துவிட்டது. அதற்காகவே காத்திருந்த மாணவர்கள் இப்போது எந்த கல்லூரியில் சேரலாம் என்ன படிக்கலாம் என தங்கள் தேடுதலை தொடங்கி விட்டனர்.

இன்னும் சில மாணவர்கள் கல்லூரிகளுக்கு அப்ளிகேஷன் போடும் வேலையையும் ஆரம்பித்துள்ளனர். அதே சமயத்தில் எந்த கோர்ஸ் படித்தால் உடனடி வேலைவாய்ப்பு என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

அதன்படி தற்போது ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் படிப்பில் தான் மாணவர்கள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனாலேயே சென்னை ஐஐடி கல்லூரி இது தொடர்பான புதிய கோர்ஸ் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்

அந்த வகையில் பி டெக் AI Data Analytics என்ற படிப்பை அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். பொதுவாக இந்த கல்லூரியில் சேர வேண்டும் என்றால் நுழைவு தேர்வு எழுதி தேர்வாக வேண்டும்.

அதன்படி இந்த படிப்பிற்கும் அவர்களே கோச்சிங் கொடுத்து தேர்வு எழுத வைக்கின்றனர். அதில் தேர்வாகும் 50 மாணவர்கள் முதல் வருட படிப்பில் சேரலாம். இந்த விவரங்களை ஐஐடி இயக்குனர் காமகோடி தற்போது தெரிவித்துள்ளார்.

இதுவரை கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம் படிப்புகளுக்கு தான் மாணவர்கள் மத்தியில் அதிக ஆர்வம் இருந்தது. ஆனால் இந்த வருடம் ஏஐ டெக்னாலஜியை படிப்பதில் தான் அவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அதனாலேயே இந்த படிப்பிற்காக இன்னும் கொஞ்சம் கூடுதல் இடங்களும் ஒதுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் கோர்ஸ் 100% வேலைவாய்ப்புக்கும் கேரண்டியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்