கதை திருட்டு வழக்கு, அர்ச்சனா கல்பாத்தி பதிலளிக்க உத்தரவு.. விஜய்யை சுழற்றியடிக்கும் பிரச்சனை

Thalapathy Vijay: நடிகர் விஜய்க்கு மட்டும் பிரச்சனைகள் எல்லாம் டோர் டெலிவரி ஆக அவரை தேடி சென்று விடும் போல. நாளை அவருடைய நடிப்பில் கோட் படம் வெளியாக இருக்கும் நிலையில், இன்று அவருடைய படத்தின் கேஸ் ஒன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்திருக்கிறது.

அது மட்டுமில்லாமல் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஜய்க்கு தொடர்ந்து மூன்று ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் அட்லி. விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் தான் பிகில்.

இந்த படத்தின் மீது கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் படம் பொருளாதார ரீதியாக வெற்றி பெற்றது. படம் ரிலீசான சமயத்திலேயே இந்த கதை ஷாருக்கான் நடித்த ஷக்தே இந்தியா படத்தின் கதை என விமர்சனங்கள் எழுந்தது.

விஜய்யை சுழற்றியடிக்கும் பிரச்சனை

வழக்கம் போல அட்லி படங்கள் ரிலீஸ் ஆகும்போது அது எந்த படத்தின் காப்பி என கண்டுபிடிப்பதை தமிழ் சினிமா ரசிகர்கள் வேலையாகவே வைத்திருக்கிறார்கள். ஆனால் பிகில் படத்தை பொறுத்த வரைக்கும் ஒருவர் நிஜமாகவே இது கதை திருட்டு என வழக்கு போட்டிருந்தார்.

அஜ்மத் மீரான் என்பவர் பிகில் படத்தின் கதை தன்னுடைய கதை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதற்கான ஆதாரத்தை அஜ்மத் மீரான் நிரூபிக்க தவறியதால் அவருடைய மனு நிராகரிக்கப்பட்டது.

தொடர்ந்து அவர் மீண்டும் மேல்முறையீட்டு மனு செய்திருக்கிறார். இதை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் படத்தின் இயக்குனரான அட்லி மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா சால்பாறை உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது.

நாளை விஜய் படம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், இன்று இப்படி ஒரு விஷயம் வெளியாகி இருப்பது விஜய் ரசிகர்களுக்கு வருத்தம் அளிப்பதாக இருக்கிறது. விஜய்க்கு மட்டும்தான் நாலா பக்கத்தில் இருந்தும் தொடர்ந்து பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கிறது.

எதிர்பார்ப்பை கிளப்பிய கோட்

Next Story

- Advertisement -