கோலிவுட்டின் பிஸி நடிகரான விஜய் சேதுபதி அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தினில் முக்கிய கதாபாத்திரத்தில் டி.ராஜேந்தர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.விஜய் சேதுபதியோடு காதலும் கடந்து போகும் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்த மடோனா இந்த படத்தின் மூலம் மீண்டும் அவருடன் இணையவுள்ளார்.

ஜூலை மாதம் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் நிலையில் இத்திரைப்படத்திற்க்கான மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கும் இத்திரைப்படத்தில் அபிநந்தன் ஒளிப்பதிவு செய்ய, கிரண் கலை இயக்குனராக பணியாற்றுகிறார்.