செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

அவர் ஜாதியை ஏன் குறிப்பிடல? இது என்னடா மேஜர்-க்கு வந்த சோதனை, திருத்தவே முடியாது உங்கள!

முன்னதாக ஒரு சமூகத்தினர் நடத்திய ஆர்பாட்டத்தில், பேசிய மதுவந்தி, ஒருவரைப் பற்றி படம் எடுத்தால், அவர் எந்த சமுதாயத்தில் இருந்து வருகிறார் என்பதைக் கூறவும் டைரக்டருக்கு துப்பு வேண்டும். உள்ளதை அப்படியே சொல்ல தைரியும் வேண்டும் என இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியை விமர்சத்திருந்தார். இது ஒரு பேசுபொருளா மாறியது. மேலும் பலர் இந்தம்மா-க்கு வேற வேலை இல்ல என்றும் கடந்து சென்றுவிட்டனர்.

இந்த நிலையில், இதற்க்கு பதிலடி பதிலடி கொடுத்துள்ளார் இயக்குனர். அவர் கொடுத்த பதிலடியை தொடர்ந்து நெட்டிசன்கள், எத்தனை முறை சாட்டையால் அடித்தாலும் இவர் மட்டும் திருந்த மறுக்கிறாரே என்றும் விமர்சித்து வருகின்றனர். மேலும் நாட்டை பாதுகாக்க சென்ற ராணுவ வீரரையும், ஏன்டா ஜாதி ரீதியா அடையாளப்படுத்துறீங்க என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது என்னடா மேஜர்-க்கு வந்த சோதனை

இந்த நிலையில், வெற்றி விழாவில் பேசிய இயக்குனர், “தனது அப்பாவை, தினமும் செல்லமாக நைனா எனவும், அம்மாவை செல்லமாக ஸ்வீட்டி எனவும் கூப்பிடும் மேஜர் முகுந்த் வரதராஜனின் பெற்றோர்கள், முதல் மீட்டிங்கிலேயே என்னிடம் வைத்த கோரிக்கை என்ன தெரியுமா?

“முகுந்த் எப்போதுமே தன்னை இந்தியன் என்று தான் சொல்லிக் கொள்ளவே ஆசைப்படுவான். அவன் சர்டிபிகேட்டில் கூட எந்த குறியீடும் இருக்கக்கூடாது என்று நினைப்பவன்.அதனால அவரை ஜாதி குறியீடு இல்லாமலே படத்தில் காண்பியுங்கள். ” என்று கூறினார்.

அதுமட்டுமின்றி, அவர் மனைவி இந்து, “முகுந்த் ஒரு தமிழர். ஒரு தமிழ் சார்ந்த நடிகரை இந்தப் படத்தில் நடிக்க வையுங்கள் என இந்து என்னிடம் கூறினார். அதன் பிறகு தான் நாங்கள் சிவகார்த்திகேயனை தேர்ந்தெடுத்தோம் என்றும் கூறியுள்ளார்.

இந்த ஜாதி பிரச்சனையை மற்ற படங்களில் கொண்டு வந்தால் கூட எப்போதும் நடக்கும் நிகழ்வு என்று கடந்து சென்று விடலாம்.. இது ஒரு ராணுவ படம், இதில் போயி இப்படியா.. இது என்னடா மேஜர்-க்கு வந்த சோதனை என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

Trending News