Tamil Cinema News | சினிமா செய்திகள்
மாதுரி தீட்சித் டேட்டிங் செய்த பிரபல கிரிக்கெட் வீரர்.. 90களில் கதிகலங்கிய பாலிவுட்!
கிரிக்கெட் வீரர்கள், சினிமா ஹீரோயின்களை டேட்டிங் செய்வது என்றும் புதிதல்ல. அந்த காலத்திலிருந்து ஹிந்தி ஹீரோயின்கள் பெயர் கிரிக்கெட் வீரர்களுடன் அடிபடுவது வழக்கமான ஒன்று.
முகமது அசாருதீன் தொடங்கி, விராட் கோலி வரை அனைவரும் ஹிந்தி ஹீரோயின்களை டேட்டிங் செய்துள்ளனர். பாலிவுட் ஹீரோயின் பலர் கிரிக்கெட் வீரர்களை திருமணம் செய்துள்ளனர்.
90களில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர்தான் மாதுரி தீட்சித், அவர் கல்யாணத்திற்கு முன்பு ஸ்மார்ட்டான இந்திய கிரிக்கெட் வீரரான அஜய் ஜடேஜாவை டேட்டிங் செய்தார் என்றும், இரண்டு பேரும் கல்யாணம் செய்யப் போகிறார்கள் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.
இரண்டு பேரும் பிலிம்ஃபேர் போட்டோ ஷூட்டில் மிகவும் நெருக்கமாக காணப்பட்டனர், ரொமாண்டிக் போஸ்கள் பல வெளிவந்து சர்ச்சையை கிளப்பின.
மேலும் மாதுரி தீட்சித் சஞ்சய் தத், ஜாக்கி ஷராஃப், மிதுன் சக்கரவர்த்தி போன்ற ஹீரோக்களிடம் காதல் உறவில் இருந்ததாக கூறப்பட்டது.
பின் மாதுரி தீட்சித் ஸ்ரீராம் மாதவ் என்னும் டாக்டரை கல்யாணம் செய்து கொண்டு கலிபோர்னியாவில் செட்டிலாகிவிட்டார்.

mathuri-ajay
