வியாபாரம் ஆகாத மாதவனின் முக்கியமான படம்.. அதிரடி முடிவால் ஆடிப்போன பாலிவுட்!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்தவர் மாதவன். மாதவன் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. ஆனால் அதனை தக்க வைத்துக் கொள்ளாமல் விட்டுவிட்டார்.

அதன் பிறகு ஆக்ஷன் களத்தில் குதித்து ஒரு சில படங்களில் நடித்தார் அதில் சில படங்கள் தோல்வி அடைந்தன அதன்பிறகு மாதவனுக்கு தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வரவேற்பு இல்லாததால் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்தார்.

பின்பு மற்ற மொழிகளில் கவனம் செலுத்தி முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு இறுதிச்சுற்று திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றார்.

ஒரு நடிகர் நடித்த படம் வெற்றி அடைந்து விட்டால் அதன் பிறகு பல இயக்குனர்கள் வாய்ப்பு கொடுப்பது சகஜம் தான் அப்படி விக்ரம் வேதா படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் மாதவனுக்கு கிடைத்தது.

madhavan star in scientist nambi narayan’s biopic

தற்போது மாதவன் ராக்கெட்ரி தி நம்பி விளைவு எனும் விஞ்ஞானி படத்தில் நடித்து வந்தார். இப்படத்தினை வேறொரு இயக்குனர் இயக்கி வந்தார். ஆனால் இயக்குனருக்கு மாதவனுக்கும் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டது அதனால் மாதவன் அவரது இயக்கத்தில் நடிக்க மாட்டேன் என தெரிவித்து விட்டார்.

பின்பு மாதவன் இப்படத்தை அவரே இயக்கி நடித்தார். ஆனால் இப்படத்தை பார்த்த தியேட்டர் உரிமையாளர்கள் இப்படத்தை வாங்குவதற்கு முன்வரவில்லை அதனால் மாதவன் 3 மணி நேரம் நடிக்கும் படத்தின் கதையை 1 மணி நேரம் படத்தின் காட்சிகளை கட் செய்து விட்டதாகவும் இனிமேலாவது படத்தை தியேட்டர் உரிமையாளர் வாங்குவார்கள் எனவும் கூறியுள்ளார். இப்படி ஒரு அதிரடி முடிவால் பாலிவுட் வட்டாரம் ஆடிப்போய் உள்ளதாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்