நடிகர் மாதவன் இறுதி சுற்று படத்தின் வெற்றிக்கு பிறகு சிறிது இடைவெளி எடுத்து கொண்டார் மாதவன். உடனே எந்த படமும் ஒப்பு கொள்ளாமல் பல கதைகளை கேட்டு வந்தார்.

இதில் இயக்குனர் கரு. பழனியப்பன் சொன்ன கதை பிடித்து போக உடனே ஒப்பு கொண்டார் . ஆனால் திரைக்கதை பணி முழுவதும் முடியாததால் ஒப்பு கொண்ட விஷயத்தை வெளியே கசியவிட வில்லை. தற்போது மேலும் ஒரு பிரபல நடிகர் மாதவனுடன் நடிக்க போகிறாராம். அவர் வேறுயாருமில்லை ராஜ் கிரண் அவர்கள், அவரும் கதை கேட்டு ஒப்பு கொண்டதாக தகவல்.

விரைவில் இப்படத்தின் அதிகாரபூர்வமான தகவல் வெளியாகும் என்கிறார்கள்