தமிழில் சுதா கொங்கரா இயக்கிய ‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் மாதவன் தமிழில் மீண்டும் ஒரு ரவுண்டு வந்தார். இறுதிச்சுற்றுப் படம் சூப்பர் ஹிட்டானது. அதன்பிறகு புஷ்கர் காயத்ரி இயக்கிய ‘விக்ரம் வேதா’ படத்தில் போலீஸாக நடித்தார். விஜய் சேதுபதி,மாதவன் சேர்ந்து நடித்த இந்தப் படமும் சூப்பர் ஹிட் ஆனது.

madhavan

இப்போது மாதவன் மும்பையில் வசித்து வருகிறார். அவர் ஒரு கதையைக் 100 சதவீதம் திருப்தியான பிறகே நடிக்க சம்மதம் சொல்கிறார். ‘இறுதிச்சுற்று’ வெற்றிக்குப் பிறகு அதிக இயக்குனர் அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க அணுகினர். ஆனால், அவர் ‘விக்ரம் வேதா’வை மட்டுமே தேர்வு செய்தார்.

madhavan
madhavan

இந்நிலையில் அடுத்து ‘களவாணி’ படத்தை இயக்கிய சற்குணம் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்க ஓகே சொல்லியிருக்கிறார் மாதவன். 2013-ல் வெளிவந்த ‘நய்யாண்டி’ படத்துக்குப் பிறகு பல வருடங்கள் கழித்து இந்தப் படத்தை இயக்க இருக்கிறார் சற்குணம். காமன் மேன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங், ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது.

director
madhavan-sargunam director

இந்த படத்தின் கதையை சுறுசுறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.