Connect with us

Cinemapettai

Cinema News | சினிமா செய்திகள்

மாதவன் எடுக்கும் மறுஅவதாரம்.. புது படம்.. புது முயற்சி

தமிழ் சினிமாவில் விஞ்ஞானத்தை மையமாகக் கொண்டு படங்கள் எடுத்து வருகின்றனர். அதில் கடைசியாக டிக் டிக் டிக் என்ற படம் ஜெயம் ரவியின் நடித்திருந்தார். அது மக்களிடையே நல்ல ஒரு வரவேற்ப்பை பெற்றது. இதனை தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கதையை ‘ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட்’என்ற பெயரில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் படமாக்கப்பட உள்ளனர்.

இதில் ‘நம்பி நாராயணன்’ கேரக்டரில் மேடி மாதவன் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஆனந்த் மகாதேவன் இதனை இயக்கவுள்ளதாக மற்றும் படத்தின் டீசர் வருகிற 31ம் தேதி வெளியாக உள்ளது  என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

R Madhavan as Nambi Rajan

இதுபோன்ற technology சம்பந்தப்பட்ட கதைகள் மற்றும் உண்மையான வாழ்க்கை வரலாறு சம்பந்தப்பட்ட கதைகளுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இதுபோன்ற கதைகளுக்கு ஃபிட்டான கேரக்டரும் ப்ரொபஷனல் லுக்கும் நம்ம மாதவனுக்கு மட்டுமே பொருந்தக் கூடியதாகும்.

இப்படம் சம்பந்தமான  வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது இதோ உங்களுக்காக,

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top